![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
இதுநாள் வரை நீங்கள் சந்தித்து வந்திருந்த நிதி பிரச்சனைகள் தற்போது ஒரு முடிவுக்கு வரும். உங்களது வருமானம் அதிகரித்து பண பற்றா குறை நீங்கும். தேவை அற்ற செலவுகள் குறையும். உங்களது நிலுவையில் இருந்து கடன்களை நீங்கள் விரைவாக அடைப்பீர்கள். மேலும் குரு 2ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் நீங்கள் பண மழையில் நனைவீர்கள். உங்களது கடன் தொல்லையில் இருந்து நீங்கள் முழுமையாக வெளி வருவீர்கள். போதுமான அளவு உங்களுக்கு பணம் இருக்கும். மேலும் உங்களது சேமிப்பும் அதிகரிக்கும்.
உங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் உங்களது நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் வீடு மனை வாங்க இது ஏற்ற காலகட்டமாகும். உங்களது வங்கி கடன் ஒப்புதல் பெற்று நீங்கள் எதிர் பார்த்த கடன் தொகை கிடைக்கும். உங்களது கடன் மதிப்பு அதிகரிக்கும். மேலும் அதிக தொகை கடன்களும் உங்களுக்கு கிடைக்கும். எனினும் அர்த்தாஷ்டம சனி நடை பெறவுள்ளதால் உங்களது வாகனத்திற்கு தகுந்த காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic