![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | முதல் பாகம் |
Sep 11, 2017 to Oct 25, 2017 பண மழை & அதிர்ஷ்ட காற்று (90 / 100)
நிகழும் குரு பெயர்ச்சியின் முதல் பாகம் உங்களுக்கு ஒரு பொற்காலம் என்றே கூறலாம். சனி, குரு மற்றும் ராகு உங்களது ராசியில் நல்ல இடங்களில் சஞ்சாரம் செய்வதால் அடுத்த 6 வாரங்களுக்கு உங்களுக்கு ஒரு பிரமாதமான சூழல் நிலவும். நீங்கள் கூட்டீச்வரர் ஆனாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. மேலும் உங்கள் உடல் நலம் அதிகரித்து நீங்கள் அதிக நேர்மறை சக்திகளை உணருவீர்கள். உங்களது அனைத்து குடும்பம் மற்றும் சொந்த பிரச்சனைகளும் ஒரு தீர்வுக்கு வரும். அதில் எந்த தாமதமும் இருக்காது. உங்களது இல்லத்தில் சுப காரியங்கள் நடத்துவீர்கள். அது அனைவரையும் மகிழ்விக்கும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆவதற்கு இது ஒரு பொற்காலம். நீங்கள் நிகழும் திருமணத்தால் பேரும் புகழும் பெறுவீர்கள். மேலும் நீங்கள் யாரையேனும் விரும்புகுரீர்கள் என்றால் இந்த பெயர்ச்சி காலகட்டம் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. உங்களது நீண்ட கால கனவுகள் கூடிய விரைவில் நிறைவேரும். மேலும் இது வரை நிலுவையில் ஏதேனும் வழக்குகள் இருந்திருந்தால் அதில் நீங்கள் மிக பெரிய வெற்றி காண்பீர்கள், மேலும் உங்களுக்கு ஒரு பெரிய தொகையும் கிடைத்தால் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.
உத்தியோகத்தில் உங்களுக்கு எதிர் பார்த்த வெற்றிகள் தொடர்ந்து வந்து உங்களை மகிழ்விக்கும். நீங்கள வேலையில் அடுத்த படிக்கு உயருவீர்கள். அதனால் உங்களுக்கு பெரிய அளவில் சம்பள உயர்வும் கிடைக்கும். உங்களது அலுவலகத்தில் அனைவரும் உங்களை மதிப்ப்பார்கள். உங்களது மறைமுக எதிரி உங்களிடத்தில் வந்து சரணடைவார்கள்.
தொழிலதிபர்கள் பெரிய அளவில் தொழில் நட்டத்தில் இருந்து மீண்டு வருவீர்கள். இதனால் உங்களுக்கு நிறைய புதிய ப்ரோஜெக்டுகளும் கிடைக்கும். அதனால் உங்களது லாபமும் பண வரத்தும் அதிகரிக்கும். நீங்கள் வேறு ஒரு தொழிலை எடுத்து செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. இதனால் நீங்கள் ஓரிரவில் பணக்காரர் ஆனாலும் ஆகலாம்.
போதுமான பண வரத்து அதிகரித்து உங்களது கடன்களை நீங்கள் ஒரே தவணையில் அடைப்பீர்கள். மேலும் அதிர்ஷ்ட சீட்டு போன்றவற்றிலும் நீங்கள் தைரியமாக முயற்ச்சிக்கலாம். ஏனெனில் இது ஒரு அதிர்ஷ்டம் நிறைந்த காலமாகவே உங்களுக்கு உள்ளது. பங்கு சந்தையில் உங்களது முதலீடு நல்ல லாபத்தை தரும். நாள் வர்த்தகர்கள் மற்றும் ஊக வர்த்தகர்கள் எதிர் பாராத அளவு லாபத்தை காண்பீர்கள். எனினும் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி செயல் பட்டாள் மேலும் வெற்றி பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic