குரு பெயர்ச்சி (2017 - 2018) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

Jul 10, 2018 to Oct 11, 2018 நல்ல நேரம் (80 / 100)


குரு உங்களது ராசியின் 2ஆம் வீட்டிலும் ராகு 11ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பல நல்ல நன்மைகளை தரவிருக்கின்றனர். கடந்த சில மாதங்கள் உங்களுக்கு இருந்த பின்னடைவுகளில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள். மேலும் உடல் உபாதைகள் குணமடைந்து நீங்கள் ஆரோக்கியத்தை திரும்ப பெறுவீர்கள். உங்களது மனைவி / கணவனிடத்தில் ஏதேனும் மன சங்கடத்தில் இருந்தீர்கள் என்றால் அதை பற்றி பேசி நல்ல தீர்வுக்கு வருவீர்கள். மேலும் திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பிறப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
நீங்கள் யாரையேனும் விரும்புகுரீர்கள் என்றால் உங்களது திருமணத்திற்கு முயற்சி எடுப்பதற்கு இது ஏற்ற சமயமாகும். பெற்றோர்கள் உங்களது காதல் திருமணத்திற்கு ஒப்போதல் தருவார்கள். நீங்கள் உங்களது நண்பர்களிடமும் குடும்பத்தினர்களிடமும் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். மேலும் அவர்களுடன் நீங்கள் உல்லாச பயணமும் மேற்கொள்வீர்கள். உங்களது குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். அது உங்களை பெருமை பட வைக்கும்.
குருவின் பலத்தால் உங்களது அலுவலகத்தில் நிலவி வரும் பிரச்சனைகளையும் அரசியலையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மேலும் சரியாக சிந்தித்து உங்களது முயற்ச்சியில் வெற்றி பெறுவீர்கள். நல்ல ஊதிய உயர்வோடு உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். மேலும் நீங்கள் புது வேலைக்காக முயற்ச்சித்தால் அது நீங்கள் எதிர் பார்த்த படி கிடைக்கும். உங்களது உத்தியோகத்தில் முனேற்றத்தையும் வெற்றியையும் பெறுவதற்கு நீங்கள் சரியான பாதையில் பயனிப்பீர்கள்.


தொழிலதிபர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்களுக்கு பல புது ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். அதனால் உங்களது பண வரத்தும் அதிகரிக்கும். உங்களது கடன் மற்றும் பண தேவைகளை சுலபமாக சமாளிப்பீர்கள். எனினும் உங்களது மகா தசை உங்களுக்கு சாதகமாக இல்லை என்றால், லாபம் சற்று குறைவாக இருக்க கூடும். அதனால் தொழிலில் ரிஸ்க் எடுப்பதை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது.
உங்களது நிதி நிலை பொறுத்தவரையில் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்களது கடன்களை நீங்கள் விரைந்து அடைத்து விட்டு சேமிக்க ஆரம்பிப்பீர்கள். நீங்கள் வங்கி கடனுக்காக வின்னப்பித்துல்லீர்கள் என்றால் அது எதிர் பார்த்த படி ஒப்புதல் பெற்று உங்களுக்கு கிடைக்கும். புது வீட்டிற்கு பெயர்வதற்கும் புது மனை விழ நடத்துவதற்கும் இந்த நான்காம் பாக காலகட்டம் உங்களுக்கு சாதகமாக உள்ளது.
பங்கு சந்தை வர்த்தகத்தில் இடுபட்டுள்ளவர்களுக்கு இது சாதகமான காலமாகும். நீங்கள் நல்ல லாபத்தை காணலாம். நாள் வர்த்தகம் மற்றும் ஊக வர்த்தகம் செய்ய முயன்றால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி நடந்து கொள்வது உத்தமம்.




Prev Topic

Next Topic