குரு பெயர்ச்சி (2017 - 2018) உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

உடல் நலம் மற்றும் ஆரோக்கியம்


கடந்த நவம்பர் 2016 முதல் குரு உங்களது ஜென்ம ஸ்தானத்திலும், கேது உங்களது விரய ஸ்தானத்திலும் சஞ்சரித்ததால் நீங்கள் பல உடல் நல பிரச்சனைகளால் அவதி பட்டிருப்பீர்கள். ஆனால் இப்பொழுது, குரு உங்களது 2ஆம் வீட்டிலும் ராகு 11ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால், அடுத்த 12 மாதங்கள் உங்களுக்கு அதிகம் நன்மைகள் தரக்கூடியதாகவே உள்ளது. நீங்கள் இது நாள் வரை அனுபவித்து வந்த உடல் நல கோளாறுகளில் இருந்து தக்க மருத்துவ உதவி பெற்று இப்பொழுது விடு படுவீர்கள். உங்களது பிரச்சனையின் மூல காரணத்தை கண்டறிந்து அதற்க்கு தகுந்த வைத்தியத்தை பெறுவீர்கள்.
குரு பெயர்ச்சியை தொடர்ந்து சனி அடுத்து உங்களது 4ஆம் வீட்டிற்கு அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்க உள்ளார். இது சற்று சாதகமான நிலை இல்லை. இதனால் நீங்கள் அதிக பிரச்சனைகளை எதிர் கொள்ளக் கூடும்., எனினும் ராகு மற்றும் குரு நல்ல நிலையில் இருப்பதால் அவர்கள் உங்களை பெரும் அளவு நிகழ விருக்கும் சிக்கல்கள் அல்லது பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றுவார்கள். அதனால் நிகழவிருக்கும் சனி பெயர்ச்சியை எண்ணி அடுத்த ஒரு வருடத்திற்கு நீங்கள் ஐயம் கொள்ளத் தேவை இல்லை.


உங்களது உடல் ஆரோக்கியத்தை நல்ல நிலையில் வைத்து கொள்ள நீங்கள் உண்ணும் உணவில் சற்று கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் உடல் பயற்சி செய்வதால் உங்களது ஆரோக்கியம் மேம்படும். வயிறு, முதுகு, கழுத்து அல்லது எலும்பு பகுதிகளில் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு தகுந்த வைத்தியத்தை உடனடியாக எடுத்து கொள்வது உத்தமம். முக்கியமாக, சனி பெயர்ச்சியால் இந்த உடல் உபாதைகள் ஏற்படுவதால் ஆயுர்வேத வைத்தியம் எடுத்துக் கொள்வது நல்லது. மேலும் உங்களது பெற்றோர்களின் உடல் நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தக்க மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. லலிதா சஹஸ்ரநாமம் கேட்பது மன அமைதியையும் நிம்மதியையும் தரும்.


Prev Topic

Next Topic