![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
கடந்த 12 மாதங்களாக நீங்கள் ஜென்ம குருவால் அதிகம் அவதி பட்டிருப்பீர்கள். அந்த காலக்கட்டம் உங்களை பெரிதாக வாட்டி எடுத்திருக்கும். எனினும் சனி நல்ல நிலையில் இருந்ததால் நீங்கள் அனைத்தையும் சமாளித்து வந்திருப்பீர்கள். மேலும் குடும்பத்திலும் மற்றும் நிதி நிலையிலும் நிலவி வந்த பிரச்சனைகளையும் நீங்கள் சாதுரியமாக சனியின் துணையால் கடந்த ஜென்ம குரு காலத்தில் சமாளித்திருப்பீர்கள்.
இப்பொழுது நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியால் வரும் அடுத்து 12 மாதங்களுக்கு நீங்கள் அதிக நல்ல பலன்களை பெறப் போகிருறீர்கள். குரு 2ஆம் வீட்டிற்கு பெயர்வதால் நீங்கள் நல்ல ஆரோக்கியதோடு இருப்பீர்கள். மேலும் உங்கள் உறவுகளுக்கு மத்தியில் மற்றும் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் இப்பொழுது தீர்ந்து நல்ல சூழல் நிலவும். உங்களது குடும்பத்தினரிடம் இருந்து உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.அது மட்டும் இன்றி, நீங்கள் உங்களது தொழில் மற்றும் உத்யோகத்தில் நல்ல வளர்ச்சியையும் வெற்றியையும் பெறுவீர்கள்.
நீங்கள் அணைத்து பண பிரச்சனைகளிலும் இருந்து வெளி வந்து போதுமான அளவு பணம் / நிதி உங்களது வங்கி கணக்கில் இருக்கும். புது முயற்சியில் முதலீடு செய்வது அதிர்ஷ்டகரமாக இருக்கும். மேலும் கேது உங்களது 11ஆம் வீட்டிற்கு பெயர்வதால், மேலும் இந்த பெயர்ச்சி காலம் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்ததாகவே இருக்கும். உங்களது நிதி நிலை வெற்றிகரமாக இருக்கும். மேலும் உங்களது மகா தசை உங்களுக்கு சாதகமாக இருக்கும் எனில், நீங்கள் மேலும் பல நன்மைகளை இந்த குரு பெயர்ச்சி காலகட்டத்தில் எதிர் பார்க்கலாம்.
Prev Topic
Next Topic