![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | மூன்றாம் பாகம் |
Mar 09, 2018 to Jul 10, 2018 பின்னடைவு (40 / 100)
குருவின் பெயர்ச்சியால் இந்த மூன்றாம் பாக காலக்கட்டம் உங்களுக்கு ஒரு கடினமான காலமாகவே இருக்கும். அடுத்த 6 வாரங்களுக்கு இதனுடன் அர்தச்ட்டம சனியும் இருப்பதால் நீங்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். இதன் தாக்கம் மார்ச் 09, 2018 மேல் சற்று அதிகரிக்கலாம். நீங்கள் உங்களது உடல் ஆரோக்கியத்தை நல்ல நிலையில் வைத்து கொள்ள சுவாச பயிற்சி, உடற் பயிற்சி மற்றும் யோகாசனம், போன்றவற்றை செய்வதால் உங்களது மனோ பலமும் உடற் அர்ரோக்கியமும் சீராக இருக்கும். மேலும் கடவுள் வழிபாடு மற்றும் த்யானம் செய்வதால் மன அழுத்தமும் பதற்றமும் குறையும். உங்களுக்கு வயிறு மற்றும் மார்பில் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற்று கொள்ளுங்கள். எனினும் ராகு உங்களது ராசியில் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் உங்களது குடும்பத்தினரும் நண்பர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்களது பெற்றோர்களில் உடல் நலத்தில் சிறிது கவனமா செலுத்த வேண்டும்.
உடல் நல குறைப்பாட்டால் உங்களுக்கு சில மன குழப்பங்கள் வரலாம். கர்ப்பணி பெண்கள் உங்களது பெற்றோர்கள், அல்லது உறவினர்களுடைய உதவி பெறுவது நல்லது. காதலர்களுக்கு இது ஒரு கடினமான காலமாகும். உங்களது சொந்த விசயங்களை நண்பர்களிடமோ அல்லது மற்றவர்களிடமோ பகிர வேண்டாம். மேலும் இந்த மூன்றாம் பாக காலகட்டத்தில் வீட்டில் சுப காரியங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது.
அலுவலகத்தில் உங்களுக்கு கொடுக்க பட்ட ப்ரோஜெக்ட்டை தக்க சமயத்தில் முடிக்க முடியாமல் அவதிப் படுவீர்கள். இது உங்களுக்கு அழுத்தத்தை தரக் கூடம். சில விசயங்கள் உங்களது கட்டுப்பாட்டை மீறிப் போகக் கூடும். அதனால் ப்ரோஜெகட்டில் ஏதேனும் தோல்வி நேர்ந்தால் அதற்க்கு நீங்கள் பொறுப்பு ஏற்று கொள்ள வேண்டியதிருக்கும். மேலும் உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் மேலாளரிடம் இருந்து உங்களுக்கு எச்சரிக்க நோட்டிசும் வரலாம். எனினும் குரு மற்றும் ராகு நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு வேலையை இழக்கும் சூழல் ஏற்படாது. இருப்பினும் வேலையில் அதிக கவனத்தோடு இருப்பது நல்லது. தொழிலதிபர்களுக்கு சில எதிர்பாராத பின்னடைவு ஏற்படலாம். உங்களது மகா தசை சாதகமாக இல்லை என்றால் ஜூலை 2018 மேல் உங்களது லாபம் குறைய வாய்ப்புள்ளது.
நீங்கள் விசா சம்பந்தமாக ஏதேனும் முயற்ச்சியில் இடு பட்டுள்ளீர்கள் என்றால் அதை தற்சமையம் தள்ளி போடுவது நல்லது. இந்த காலகட்டத்தில் பயணத்தை தவிர்ப்பது நல்லது. தங்க நகைகள், பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் திருடு போக வாய்ப்புள்ளதால் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதிக செலவுகள் உங்களது சேமிப்பை கரைக்க கூடும். மேலும் நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. ஊக வர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது. நீண்ட கால முதலீடு செய்பவர்கள் சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது.
Prev Topic
Next Topic