![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
ஜூலை 2018 முதல் குடும்பத்தில் சிறப்பான சூழல்கள் நிலவி இருந்திருக்கும். உங்கள் வாழ்க்கையில் பல சிறப்பான விசயங்கள், நிச்சயம், திருமணம், புது வீடு புகுதல் மற்றும் குழந்தை பிறப்பு போன்றவை நடந்திருக்கும். தற்போது குரு பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிபதால் உங்கள் குடும்ப வாழ்க்கையில் பெரிதாக எந்த பாதிப்புகளும் ஏற்படாது. நீங்கள் இந்த குரு பெயர்ச்சியில் தொடர்ந்து நல்ல பலன்களை பெறுவீர்கள். சனி பகவான், ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை தருவார்கள்.
திருமணம் ஆகாத உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது ஏற்ற காலகட்டமாகும். நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்துவதில் வெற்றி அடைவீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். மேலும் உங்கள் குடும்ப சூழல் உங்கள் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.
உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் மே 2019 வாக்கில் வேறு அலுவலகத்து இட மாற்றம் செய்ய நேரிடலாம். இது உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர்களை விட்டு தற்காலிகமாக பிரிந்து இருக்க செய்திடும். எனினும் உங்கள் உறவில் பெரிதாக எந்த ஒரு பின்னடைவும் இருக்காது. எனினும் மனதளவில் சில வருத்தங்கள் ஏற்படலாம், ஏனென்றால் நீங்கள் பொற்காலத்தை கடந்து விட்டீர்கள்.
Prev Topic
Next Topic