![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | முதல் பாகம் |
அக்டோபர் 11, 2018 முதல் மார்ச் 27, 2019 சிறப்பான பலன்கள் (65 / 100)
குரு பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சிறப்பான பலன்களை சமீப காலங்களில் தந்திருப்பார். தற்போது குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு இடம் மாறுகிறார். சனி பகவான், ராகு மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர். இதனால் எந்த ஒரு பெரிய பாதிப்பு தரக்கூடிய பிரச்சனைகளும் குரு பகவானால் இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் உங்களுக்கு ஏற்படாது. நீங்கள் தொடர்ந்து நல்ல பலன்களை இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் பெறுவீர்கள்.
உங்கள் உடல் நலம் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும். மேலும் உங்கள் நிதி நிலை மற்றும் வருமானம் சீராக இருக்கும். நீங்கள் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியோடு நேரம் செலவிடுவீர்கள். காதல் விசயங்களுக்கு இந்த முதல் பாக காலகட்டம் சிறப்பாக உள்ளது. திருமணம் ஆனவர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள். உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் அனைவரும் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது ஏற்ற காலகட்டமாக இருக்கும். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள்.
உத்தியோகத்தில் அடுத்த நிலைக்கு உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பிறர் உங்கள் வளர்ச்சியை கண்டு உங்கள் மீது பொறாமை படுவார்கள். உங்கள் வேலை சுமை சுமாராக இருக்கும். உங்கள் வங்கியில் போதுமான பண இருப்பு இருக்கும். தொழிலதிபர்கள் மிதமான வளர்ச்சியை காண்பார்கள். உங்கள் பங்கு சந்தை முதலீடு மிதமான லாபத்தை கொடுக்கும். எனினும் ஊக வர்த்தகம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அவ்வாறு செய்ய விரும்பினால் உங்கள் பிறந்த ஜாதக பலனை பார்த்து அதன் பின் முயற்ச்சிப்பது நல்லது.
Prev Topic
Next Topic