குரு பெயர்ச்சி (2018 - 2019) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

செப்டம்பர் 17, 2019 முதல் நவம்பர் 04, 2019 வரை பெரிய அளவில் அதிர்ஷ்டம் (85 / 100)


குரு பகவான் உங்கள் ராசியின் லாப ஸ்தானத்திற்கு இடம் மாறுகிறார். இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிக நேர்மறை பலன்களை பெறுவீர்கள். மேலும் சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் மேலும் சிறப்பான பலன்களை பெறுவர்கள். நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். காதலர்கள் பொற்காலத்தை காண்பார்கள். திருமணம் ஆன தம்பதியினர்கள் அன்யுனியத்தோடும் மகிழ்ச்சியோடும் இருப்பார்கள். உங்களது நீண்ட கால கனவுகள் இந்த காலகட்டத்தில் நிறைவேறும்.
உங்கள் உத்தியோகம் பொறுத்தவரை இது ஒரு பொற்காலமாக இருக்கும். நீங்கள் பதவி உயர்வு பெற்றும் சம்பள உயர்வும் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல பதிப்பு கிடைக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் மறைமுக எதிரிகள் சக்தி இழப்பார்கள். உங்களுக்கு எதிராக எந்த ஒரு சதி திட்டங்களும் இருக்காது. தொழிலதிபர்கள் தொடர்ந்து நல்ல லாபம் காண்பார்கள். புதிதாக உங்களுக்கு நீண்ட கால ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். இது உங்கள் வளர்ச்சியை அதிகப் படுத்தும். நீங்கள் வேறு ஒரு நிறுவனத்தை வாங்கி நடத்தவும் உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.


ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருந்தால் உங்களுக்கு அதில் எதிர் பார்த்த வெற்றி கிடைக்கும். உங்களுக்கு மொத்தமாக ஒரு தொகை செட்டில்மென்டாக கிடைத்தாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை/ உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து முற்றிலுமாக வெளி வருவீர்கள். உங்கள் அதிர்ஷ்ட்டத்தை சோதித்து பார்க்க இது ஏற்ற காலகட்டமாகும். உங்கள் பங்குகள் நல்ல லாபம் பெற்று தரும். நாள் வர்த்தகம் மற்றும் ஊக வர்த்தகம் செய்பவர்கள் நல்ல லாபம் காண்பார்கள்.


Prev Topic

Next Topic