![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
குரு பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் கடந்த ஒரு வருடம் சஞ்சரித்து உங்களுக்கு பல சிறப்பான பலன்களை தந்திருப்பார். குறிப்பாக ஜூலை 2018 முதல் அக்டோபர் 2018 வரை நீங்கள் ஒரு பொற்காலத்தை கண்டிருப்பீர்கள். அனேக நேர்மறை விசயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கும். ராகு, கேது மற்றும் சனி பகவான் போன்ற முக்கிய கிரகங்களும் சிறப்பான நிலையில் சஞ்சரித்திருந்திருப்பார்கள்.
தற்போது அக்டோபர் 11, 2018 அன்று குரு பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு இடம் மாறுகிறார். இதனால் நீங்கள் பெரிதாக பாதிக்க பட மாட்டீர்கள். ஏனென்றால் சனி பகவான் உங்கள் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து தொடர்ந்து உங்களுக்கு நேர்மறை சக்த்திகளை அதிகம் கொடுப்பார். கேது உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு மார்ச் 2019ல் பெயர்ந்து உங்களுக்கு நிதி நிலையில் சிறப்பான பலன்களை தருவார்.
உங்கள் நீண்ட கால கனவுகள் நினைவாகும். உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நீங்கள் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் குடும்ப பிரச்சனைகளை நீங்கள் சரி செய்வீர்கள். உங்களுக்கு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருந்திருந்தால் அது உங்களுக்கு சாதகமான முறையில் தீர்ப்பு பெரும். நீங்கள் பங்கு சந்தை முதலீடு செய்திருந்தால் அல்லது செய்ய விரும்பினால் உங்கள் பிறந்த ஜாதக பலனை பார்த்து அதன் பின் முயற்ச்சிப்பது நல்லது. மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி வரும் ஆகஸ்ட் 2019 வரை உங்களுக்கு பல சிறப்பான பலன்களை தரும்.
Prev Topic
Next Topic