குரு பெயர்ச்சி (2018 - 2019) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

ஏப்ரல் 25, 2019 முதல் செப்டம்பர் 17, 2019 வரை மிதமான வளர்ச்சி (45 / 100)


இந்த குரு பெயர்ச்சி காலகட்டத்திலேயே இந்த மூன்றாம் பாகம் சற்று கடுமையானதாக இருக்க கூடும். ராகு பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்பம் மற்றும் உறவினர்கள் போன்ற சூழலில் சில பின்னடைவுகளை ஏற்படுத்த கூடும். சனி பகவான் மற்றும் கேது இணைந்து விசயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்காமல் இருக்க உதவுவார்கள். எனினும் இந்த காலகட்டத்தில் நீங்கள் சற்று மனதளவில் வருத்தம் அடையக் கூடிய சூழல் ஏற்படலாம். உங்கள் உடல் நலம் சீராக இருக்கும். மூச்சு பயிற்ச்சி, யோகா, த்யானம் மற்றும் கடவுள் வழிபாடு செய்வது உங்கள் மனோ பலத்தை அதிகப் படுத்தும். இது உங்களது தேவையற்ற பயம் மற்றும் பதற்றத்தில் இருந்து வெளி வர உதவும்.
மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் திருமணம் ஆனவர்கள் சற்று அன்யுனியம் குறைந்து காணப் படுவார்கள். திருமணம் ஆன பெண்கள் கருவுற்றிருந்தாள் தங்கள் பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்களின் துணையோடு இருப்பது நல்லது. காதலர்கள் தேவையற்ற சில மாற்றங்களை காண நேரிடும். இருப்பினும் அது குறுகிய காலத்திற்கு மட்டுமே. உங்கள் சொந்த விசயங்களை பிறரிடம், உங்கள் நண்பர்களிடம் கூட பகிராமல் இருப்பது நல்லது. சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற காலகட்டம் இல்லை.


அலுவலகத்தில் உங்கள் ப்ரோஜெக்ட்டை தக்க சமயத்தில் முடிக்க நீங்கள் அதிகம் அழுத்தத்தோடு பனி புரிய வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்கள் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு பொறாமை படுவார்கள். நீங்கள் அலுவலகத்தில் ஏற்படும் அரசியலை சமாளிக்க அதிக நேரம் செலவிட வேண்டிய சூழல் வரலாம். உங்கள் கடுமையாக உழைப்பிற்கு ஏற்ற சன்மானமும் பாராட்டும் உங்களுக்கு கிடைக்கும். தொள்ளதிபர்கள் போட்டியாளர்களால் அதிக அழுத்தத்தை காண்பார்கள். உங்கள் பனி சுமையை சமாளிக்க நீங்கள் கடினமாக வேலை பார்க்க வேண்டும். எனினும் இறுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
நீங்கள் விச ஸ்டாம்பிங் செய்ய விரும்பினால் அதனை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. உங்கள் பண வரத்து சீராக இருக்கும். எனினும் செலவுகள் அதிகரிப்பது உங்கள் சேமிப்பை குறைக்க கூடும். நீங்கள் பங்கு சந்தை முதலீட்டை குறைத்து கொள்வது நல்லது. ஊக வர்த்தகத்தை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. நீண்ட கால முதலீடு செய்பவர்கள் இந்த காலகட்டத்தில் சற்று பங்குகள் வாங்கல் விற்றலை தவிர்ப்பது நல்லது.



Prev Topic

Next Topic