![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
உங்கள் உத்தியோகத்தில் கடந்த ஆண்டு ஒரு பொற்காலமாகவே இருந்திருக்கும். உங்களுக்கு நல்ல பதவி உயர்வு மற்றும் விருதுகள் கிடைத்திருந்தால் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. புது இடத்திற்கு இட மாற்றமும் உங்களை மகிழ்வடைய செய்திருக்கும். நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் தற்போது நிகழும் குரு பெயர்ச்சியால் மிதமான வளர்ச்சியை உங்கள் உத்தியோகத்தில் காண்பீர்கள். மேலும் சனி பகவான் மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரிப்பது உங்களுக்கு தொடர்ந்து முன்னேற்றத்தை கொடுக்கும்.
எனினும் குரு பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அலுவலகத்தில் சில அரசியல் நிகழக் கூடும். உங்கள் வேலை சுமையும் அதிகரிக்க கூடும். மனதளவில் உங்களுக்கு அத்தகைய சூழலை சமாளிப்பது சற்று கடினமாக இருக்கக் கூடும். எனினும் தற்போது நீங்கள் இருக்கும் நிலையிலேயே உங்கள் உத்தியோகத்தில் இருந்தால் சிறப்பாக இருக்கும். நீங்கள் வேறு மாற்றங்களை எதிர் பார்த்தால் மட்டுமே சில பிரச்சனைகள் வரக் கூடும்.
நீங்கள் பிறரிடம் அனுசரித்து போகக் கூடிய திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு விசா பிரச்சனையை வந்தாலும் அது உங்களுக்கு சாதகமாக சரியாகி விடும். அரசு வேலை பார்ப்பவர்களுக்கு அவ்வளவு நல்ல நேரம் இல்லை. உங்களுக்கு தேவையற்ற இட மாற்றம் மற்றும் அதனால் உங்கள் சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
Prev Topic
Next Topic