![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) தொழில் அதிபர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | தொழில் அதிபர்கள் |
தொழில் அதிபர்கள்
குருவின் பலத்தால் தொழிலதிபர்கள் கடந்த சில மாதங்கள் சிறப்பான பலன்களை பெற்றிருப்பார்கள். நீங்கள் நல்ல நிலையிலும், நல்ல செல்வாக்கு மற்றும் பெயருடனும் இருந்திருப்பீர்கள். எனினும், இனி வரும் மாதங்களில் உங்கள் தொழில் நல்ல நிலையில் தொடர உங்கள் சாதக பலன் தேவை. உங்கள் பங்குதாரருடன் உங்களுக்கு சில கருத்து வேறுபாடு மற்றும் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் போட்டியாலர்களுடனும் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் சில வழக்குகளையும் சந்திக்க நேரிடலாம். உங்கள் சோதிடரிடம் உங்கள் சாதகத்தை காண்பித்து அதற்கான ஆலோசனைகளை பெறுவது நல்லது. இதனால் நீங்கள் சில சிக்கலான சூழல்களை தவிர்க்கலாம்.
சதி மற்றும் மறைமுக எதிர்கள் குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு பெயருவதால் ஏற்படக் கூடும். உங்கள் போட்டியாளர்கள் உங்களது இந்த பலவீனமான நிலையை பயன் படுத்தி கொள்வார்கள். அதிக சொந்த மற்றும் குடும்ப பிரச்சனைகள் உங்களை அக்டோபர் 2018 முதல் மார்ச் 2019 வரை சூழ்ந்திருக்கும். எந்த ஒரு நல்ல ஆலோசனையும் இன்றி உங்களால் வேலை இடத்தில் நிலையாக செயல் பட முடியாமல் போகலாம். பண வரத்து அதிகமாக பாதிக்க படக் கூடும். இது உங்கள் மன அமைதியையும் பாதிக்கும். உங்கள் வங்கி கடன் ஒப்புதல் பெறாமல் போகலாம், உங்கள் புதுமையான யோசனைகளுக்கு முதலீட்டாளர்கள் செவி கொடுக்க மாட்டார்கள். கடன் கொடுப்பவர்கள் கடனை திருப்பி கொடுக்க சொல்லி அதிக அழுத்தம் கொடுப்பார்கள். மேலும் வட்டி விகிதத்தையும் உயர்த்த கூடும்.
சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் கடுமையான காலகட்டத்தை கடக்க வேண்டிய சூழல் ஏற்படலாம், சமூக வலைதளங்களில் உங்கள் செல்வாக்கு பாதிக்கப் படக் கூடிய சில விசயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது, நீங்கள் ஏப்ரல் 2019 முதல் ஜூலை 2019 வரை குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் வக்கிர கதி அடையும் போது எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் நன்கு சிந்தித்து பின் செயல் படுவது நல்லது.
Prev Topic
Next Topic