குரு பெயர்ச்சி (2018 - 2019) குடும்ப மற்றும் உறவு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

குடும்ப மற்றும் உறவு


உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் நல்ல உறவுநிலையில் இருப்பது அடுத்த 12 மாதங்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கும். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ள அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். உங்கள் மனைவி / கணவன், அவருடைய வீட்டார்கள், அல்லது உங்கள் பெற்றோர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடு மற்றும் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் நெருக்கமாக இருக்கும் நபர்கள் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்க கூடும். எனினும் அது நீங்கள் அவருடன் அதிகம் உடைமையோடு இருப்பதால் ஏற்படுவதாகும். எனினும் இந்த காலகட்டத்தை கடக்க நீங்கள் அதிகம் பொறுமையோடு இருக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்கமாட்டார்கள். மேலும் அவர்களது காதல் விசயங்கள் உங்களை ஆச்சரியப் படுத்தும். உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமனத்திர்க்கான ஏற்பாடுகளை செய்வதற்கோ அல்லது சுப காரியங்கள் செய்வதற்கோ இது ஏற்ற காலகட்டம் இல்லை. உங்களுக்கு விவாகரத்து, குழந்தை காவல், மற்றும் சொத்து சம்பந்தமான விசயங்களில் ஏதேனும் வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக இருக்காது. மேலும் நிதி பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


ராகு மார்ச் 2௦19ல் பெயருவதால் உங்களுக்கு ஒரு நல்ல நிவாரணத்தை கொடுக்க கூடும். மேலும் குரு ஏப்ரல் 2௦19ல் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு இடம் மாறுகிறார். இதனால் நீங்கள் ஓரளவிர்க்கயினும் நிவாரணம் பெற்று மன சங்கடங்களில் இருந்து வெளி வருவீர்கள். எனினும் இந்த குரு பெயர்ச்சி காலகட்டத்தை கடக்க மற்றும் நல்ல உறவு நிலையை தக்க வைத்து கொள்ள நீங்கள் அதிகம் பொறுமையோடு இருக்க வேண்டும்.


Prev Topic

Next Topic