குரு பெயர்ச்சி (2018 - 2019) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

நிதி / பணம்


கடந்த ஒரு வருடமாக உங்கள் நிதி நிலையில் சில முன்னேற்றம் ஏற்ப்பட்டிருந்திருக்கும். உங்கள் கடன்களை குருவின் பலத்தால் அடித்திருப்பீர்கள். மேலும் குரு அக்டோபர் 11, 2018 முதல் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் நிதி வளர்ச்சி பாதிக்கப் படக் கூடும். எனினும் உங்கள் வருமானம் நிலையாக இருக்கும். உங்கள் நிதி தேவைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கும். உங்கள் சேமிப்பு விரைவாக கரையும். நீங்கள் கிரெடிட் கார்டை நம்பி சில தேவைகளை பார்த்துக் கொள்ளும் சூழல் ஏற்படலாம். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. மேலும் உல்லாச காரணங்களுக்காக செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது.
பலவீனமான கிரெடிட் மதிப்பால் உங்கள் வங்கி கடன் ஒப்புதல் பெறாமல் போகலாம். உங்கள் கிரெடிட் கார்டு காலவனை முடிவடையும் நேரமும் நெருங்கக் கூடும்.நீங்கள் உங்கள் கடனை கட்ட அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். தங்க நகைகள் வாங்க இது ஏற்ற காலகட்டம் இல்லை. நீங்கள் பயணம் செய்தால், சில தருணங்களில் திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது., அதனால் உங்கள் சொந்த பொருட்கள் மற்றும் சொத்துக்களின் மீது போதுமான காப்பீடு உள்ளதா என்று பார்த்து கொள்வது நல்லது.


உங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்க இது ஏற்ற காலகட்டம் இல்லை. முடிந்த வரை யாரிடமும் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களுக்கு கடன் வாங்க உடன் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது, பின் அந்த கடன் உங்கள் பொறுப்பாகி விடக் கூடும். இந்த காலகட்டத்தை கடக்க நீங்கள் அதிக பொறுமையோடு இருக்க வேண்டும். ஏப்ரல் 2019 முதல் ஜூலை 2019 வரை நீங்கள் நிதி மறு பரிசீலனை செய்ய முயற்ச்சிக்கலாம்.


Prev Topic

Next Topic