![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | முதல் பாகம் |
அக்டோபர் 11, 2018 முதல் மார்ச் 27, 2019 வரை கடுமையான சோதனை காலம்(35 / 100)
குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு இடம் மாறுவது சவால் மிகுந்த காலகட்டத்தை குறிக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த நல்ல வாய்ப்புகளையும் எதிர் பார்க்க முடியாது. நீங்கள் செய்யும் எந்த விடயத்திலும் உங்களுக்கு அதிர்ஷ்ட்டம் இல்லை என்பது போல் உங்களுக்கு தோன்றும். இந்த காலகட்டத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் உங்களால் ஏற்று கொள்ள முடியாது. உங்கள் மனம் அதிகம் பாதிக்க படக் கூடும். பதற்றம் மற்றும் தேவையற்ற பயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களுடன் இருந்தாலும் அதிகம் தனித்து இருப்பது போல் உணருவீர்கள்.
உங்கள் மனைவி / கணவன் மற்றும் அவரது வீட்டார்கள் உங்களுக்கு பல பிரச்சனைகளை தந்தாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. நீங்கள் அதிகம் பொறுமையோடு இருந்த இந்த சவால் நிறைந்த காலகட்டத்தை கடக்க வேண்டும். வீட்டில் சுப காரியம் நிகழ்த்த இது ஏற்ற காலகட்டம் இல்லை. காதலர்களுக்கு எதிர்பாரா விதமாக அதிகம் வாக்குவாதம் மற்றும் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் விரும்புபவரை விட்டு பிரியும் சூழல் வந்தாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.
உங்கள் அலுவலகத்தில் அரசியில் அதிகம் ஏற்படுவதால் உங்கள் உத்தியோகம் பெரிதும் பாதிக்க படக் கூடும். உங்கள் முதலாளி உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்க மாட்டார். நீங்கள் உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களுடன் அனுசரித்து நடந்து உங்கள் உத்தியோகத்தை காப்பாற்றி கொள்ள வேண்டும். தொழிலதிபர்களுக்கு எதிர் பாராத பின்னடைவுகளை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அனேக ப்ரோஜெக்ட்டுகள் ரத்தாக வாய்ப்பு உள்ளது. போட்டியாளர்களால் நீங்கள் உங்கள் நீண்ட கால வாடிக்கையாளர்களை இழக்க கூடும்.
உங்கள் செலவுகள் விண்ணை தோடும் அளவிற்கு உயர கூடும். உங்கள் சேமிப்பு வேகமாக கரையும். நீங்கள் உங்கள் நிதி தேவைகளை சந்திக்க கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படக் கூடும். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்தால் அது உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்த கூடும். பங்கு சந்தையில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. சூது போன்றவற்றில் பணம் செலவழிப்பதை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic