![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | நான்காம் பாகம் |
ஆகஸ்ட் 11, 2019 முதல் நவம்பர் 04, 2019 வரை மோசமான நேரம்(20 / 100)
இந்த காலகட்டம் உங்கள் வாழ்க்கையில் பல எதிர் பாராத விசயங்களை ஏற்படுத்த கூடும். உங்கள் கட்டுப் பாட்டை மீறி விசயங்கள் நடக்க கூடும். உங்களுக்கு எதிர் பாராத கெட்ட செய்திகள் வரக் கூடும். தூக்கம் இல்லாத பல இரவுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். அதிக கவலை மற்றும் மன வருத்தத்துடன் நீங்கள் இருக்க கூடும். சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும். கடவுள் வழிபாடு செய்து நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்து கொள்ள வேண்டும். மேலும் உங்கள் வாழ்க்கையில் நடப்பதை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும்.
உங்கள் மனைவி / கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும். நீங்கள் கவனமாக இல்லை என்றால் தற்காலிகமாக அவரை விட்டு பிரிய நேரிடலாம். காதலர்கள் தங்களது உறவில் அதிக வலியை உணரக் கூடும். நீங்கள் விரும்புபவரிடம் அதிகம் உடைமை உடையவராக இருந்தால் அது பல மன ரீதியான பிரச்சனைகளையும் மனதில் அதிக பாரத்தையும் ஏற்படுத்த கூடும். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். நீங்கள் உங்கள் மீது எந்த ஒரு தவறும் இல்லாமல் உங்கள் உறவினர்கள் முன் அவமானப் பட்டு நிற்க கூடும். தவறான் பழிச்சொல் உங்கள் பெயரை கெடுக்க கூடும். மேலும் கிரிமினல் வழக்குகள் ஏதேனும் உங்கள் மீது விழுந்தால் அதில் இருந்து வெளிவருவது கடினமான ஒன்றாக மாறக் கூடும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் அலுவலகத்தில் ஏற்படும் அரசியலை சமாளிக்க முடியாமல் இருப்பீர்கள். நீங்கள் உங்கள் வேலையை இழக்கும் சூழலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இல்லை என்றால் நீங்கள் அலுவகத்தில் அதிகம் ஏற்படும் அரசியல் மற்றும் அவமானத்தால் உங்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டு அலுவலகத்தை விட்டு வரக் கூடும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவற்றை எதிர் பார்க்க இது ஏற்ற காலகட்டம் இல்லை. இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்வாதாரத்திற்காக உத்தியோகத்தை தக்க வைத்து கொள்ள முயற்ச்சிக்க வேண்டும். உங்கள் பிறந்த ஜாதகம் பலவீனமாக இருந்தால் உங்கள் வங்கி கணக்கு திவால் ஆகும் நிலையம் ஏற்படலாம்.
நிதி நிலை பொறுத்த வரையில் இது ஒரு சவால் நிறைந்த காலகட்டமாக இருக்க கூடும். உங்கள் அன்றாட பண தேவைக்கு உங்கள் கிரெடிட் கார்டை சார்ந்து இருக்கும் சூழல் ஏற்படலாம். உங்கள் பண தேவைக்காக நீங்கள் கடன் வாங்கும் சூழலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்கள் உறவினரிடம் இருந்து பணம் கடனாக வாங்கி இருந்தால் தற்போது அவமானப் படக் கூடிய சூழலும் ஏற்படலாம். நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் நீங்கள் உங்கள் சொத்துக்களை இழக்கும் சூழலும் ஏற்படக் கூடும். எனினும் குரு பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்திற்கு நவம்பர் 04, 2019 அன்று பெயரும் பொது குறிப்பிட தக்க நிவாரணத்தை வாழ்க்கையில் காண்பீர்கள்.
Prev Topic
Next Topic