குரு பெயர்ச்சி (2018 - 2019) ஆரோக்கியம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

ஆரோக்கியம்


கடந்த ஒரு வருடமாக குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல உடல் ஆரோக்கியத்தை பெற உதவி செய்திருப்பார். தற்போது குரு உங்கள் ராசியின் 8ஆம் வீடான அஸ்தம ஸ்தானத்திற்கு இடம் மாறுகிறார். இதனால் உங்கள் உடல் நலம் பாதிக்கப் படாது. எனினும் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சனிபகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் பெற்றோர்களின், குறிப்பாக உங்கள் தந்தையின் உடல் நலத்தை பாதிக்க கூடும்.
நீங்கள் நெருக்கமாக உள்ளவர்களுடன் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது உங்கள் வாழ்க்கை துணைவர், குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களையும் குறிக்கும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் பதற்றம், மன அழுத்தம் மற்றும் வேறு சில உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் நீங்கள் அதிகம் கவனத்தோடு இருக்க வேண்டும். உங்கள் நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு எதிராக செயல் படக் கூடும், மேலும் அவர்கள் உங்களுக்கு எதிரியாகவும் மாற வாய்ப்பு உள்ளது. உங்கள் சொந்த விசயங்களை நண்பர்களுடனும் மற்றவர்களுடனும் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் தீய பழக்கத்திற்கு அடிமையாக வாய்ப்பு உள்ளது.


நீங்கள் வெளிநாட்டில் வசிக்கின்றீர்கள் என்றால் அல்லது உங்கள் வீட்டை விட்டு தொலைதூரத்தில் வசிக்கின்றீர்கள் என்றால் அதிகம் தனிமையை உணரக் கூடும். இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்க கூடும். மேலும் உங்களுக்கு நல்ல நண்பர்களோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ உங்கள் வருத்தங்களை பகிர்ந்து கொள்ள அருகில் இல்லாமல் போகலாம். நீங்கள் இந்த காலகட்டத்தில் ஒரு நல்ல ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று அதன் படி நடந்து இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்ச்சிக்கலாம். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஹனுமன் சலிச கேட்பது சற்று ஆறுதலாக இருக்கும்.


Prev Topic

Next Topic