குரு பெயர்ச்சி (2018 - 2019) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

காதல்


அடுத்த ஒரு வருடத்திற்கு காதலர்கள் கசப்பான அனுபவங்களையே பெறுவார்கள். உங்களுக்கு காதல் முற்றிலுமாக இருக்காது. நீங்கள் தற்போது யாரையேனும் விரும்புகிறீர்கள் என்றால் அவர்களுடன் அதிக உடைமையோடு இருப்பீர்கள். இது அதிக பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும். குறிப்பாக புது நண்பர்கள் யாரேனும் உங்கள் இருவருக்கும் இடையே வந்தால் பிரச்சனைகள் அதிகரிக்கும். நீங்கள் அதிக பொறுமையோடு இருந்து நீங்கள் விரும்புபவரை புரிந்து கொண்டு நடப்பது நல்லது. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் தற்காலிகமாக உங்களுக்குள் சில பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிய நேரிடலாம்.
நீங்கள் சமீபத்தில் காதலில் விழுந்திருந்தால் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். மேலும் புதிதாக யாரிடமும் உங்கள் காதல் விருப்பத்தை கூற இது ஏற்ற காலகட்டம் இல்லை. நீங்கள் அவ்வாறு செய்தால் உங்கள் நண்பர்கள் உங்கள் மும் நன்றாக பேசி அதிகம் நேரம் செலவிட்டு பின் உங்களுக்கு பின் சென்று உங்களை கிண்டல் செய்து பேசக் கூடும். இதனால் நீங்கள் நண்பர்களுக்கு மத்தியில் அவமானப் படக் கூடிய சூழல் ஏற்படலாம். அதற்க்கு உங்கள் காதல் விருப்பத்தை கூறாமல் இருப்பது நல்லது.


உங்கள் மனம் தேவையற்ற எண்ணங்களால் மற்றும் பயத்தால் சூழ்ந்திருக்கும். தவறான நபரை நோக்கி உங்கள் கவனம் ஈர்க்க கூடும். திருமணம் ஆனவர்கள் அதிக சென்டிமென்டால் சற்று அன்யுனியமாக இருப்பார்கள். குழந்தை பேருக்கு திட்டமிட்டால் உங்கள் சாதக பலனை பார்த்து பின் முயற்ச்சிப்பது நல்லது. நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் திருமணத்திற்கான முயற்ச்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. இது உங்கள் மன அழுத்தத்தையும் வருத்தத்தையும் குறைக்க உதவும்.


Prev Topic

Next Topic