![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
கடந்த ஒரு வருடம் குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் இருந்தது உங்களுக்கு நல்ல நிவாரணத்தை கொடுத்திருக்கும். அனேகமானோர் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கண்டிருப்பீர்கள். குறிப்பாக ஜூலை 2018ல் இருந்து சிறப்பான பலன்களை கண்டிருப்பீர்கள். எனினும் தற்போது குரு பகவான் உங்கள் ராசியின் காலத்திற ஸ்தானத்தில் இருந்து அஸ்தம ஸ்தானத்திற்கு அக்டோபர் 11, 2018 அன்று இடம் மாறுகிறார்.
சனி பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சற்று நிவாரணத்தை உங்களுக்கு கொடுக்கும். ரகு மார்ச் 2019ல் பெயர உள்ளதால் உங்களுக்கு மேலும் சிறப்பாக இருக்கும். எனினும் தற்போது நிகழும் குரு பெயர்ச்சி உங்களுக்கு சில கசப்பான அனுபவங்களை தரக் கூடும். குடும்பத்தில் அதிக பிரச்சனைகள் வரக் கூடும். உங்கள் பிறந்த ஜாதகம் பலவீனமாக இருந்தால் நீங்கள் மனதளவில் அதிகம் பாதிக்க படக் கூடும்.
உங்கள் நிதி மற்றும் உத்தியோகம் பாதிக்க படக் கூடும். தற்போது நிகழும் இந்த குரு பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் பல பெரிய சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடும். நீங்கள் அதிக பொறுமையோடு இருந்து இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை, உத்தியோகம் மற்றும் நிதி குறித்து எந்த ஒரு முக்கிய முடிவுகளும் எடுக்காமல் இருப்பது நல்லது.
Prev Topic
Next Topic