![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 27, 2019 முதல் ஏப்ரல் 25, 2019 வரை ஆச்சரியத் தக்க முன்னேற்றம் (70 / 100)
மார்ச் 09, 2019 அன்று ராகு உங்கள் ராசியின் 3ஆம் இடத்திற்கு இடம் மாறுகிறார். குரு அதி சரமாய் னுசு ராசிக்கு மார்ச் 27, 2019 அன்று முன்னேறுவார். இது உங்களுக்கு பல சிறப்புகள் நிறைந்த காலகட்டமாகும். இந்த காலகட்டம் ஒரு மாதத்திர்க்கே ஆனாலும் நீங்கள் பல குறிப்பிட தக்க நேர்மறை மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் காண்பீர்கள்.
குரு உங்கள் ஜென்ம ராசியில் சிறிது காலம் பார்வை இடுவதால் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். கடந்த கால நிகழ்வுகளில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள். உங்கள் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை ஏற்று கொள்ள உங்கள் மனம் பலம் பெரும். உங்கள் உடல் நல பிரச்சனைகளுக்கு நீங்கள் நல்ல தீர்வு காண்பீர்கள். உங்கள் மனைவி / கணவன் மற்றும் அவரது வீட்டாரிடம் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து நல்ல முன்னேற்றம் காணும். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் உறவுகளை நன்கு புரிந்து கொள்வீர்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. எனினும் இந்த குரு பெயர்ச்சி காலகட்டத்தின் மற்ற பகுதிகள் அவ்வளவாக சிறப்பாக இல்லாததால் நீங்கள் உங்கள் பிறந்த ஜாதக பலனை பார்த்து அதன் பின் திருமணத்திற்கு முயற்சி எடுப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் குழந்தை பேருக்கு திட்டமிடுவதை தவிர்ப்பது நல்லது.
நீங்கள் புதிதாக வேலை வாய்ப்பிற்கு முயர்ச்சிக்கின்றீர்கள் என்றால் அது உங்களுக்கு கிடைக்கும். எனினும் உங்களது தகுதிக்கு ஏற்ற சம்பளம் மற்றும் பதவி கிடைப்பது சந்தேகமே. நீங்கள் கடந்த காலத்தில் விசா குறித்து பிரச்சனைகள் சந்தித்திருந்தால் அது தற்போது சரியாகி விடும். இந்த நான்கு வாரங்கள் பயணம் மற்றும் குடியேற்றம் குறித்த பலன்கள் பெறுவதில் சிறப்பாக உள்ளது. உங்கள் நிதி நிலை முன்னேற்றம் காணும். உங்களுக்கு வங்கியில் கடன் கிடைக்கும். மேலும் உங்கள் நண்பர்கள் உங்கள் கடனை அடைக்க உதவி செய்வார்கள். ஜாதக பலன் இல்லாமல் பங்கு சந்தை முதலீட்டை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. ஊடகம் மற்றும் திரைத் துறையில் இருப்பவர்கள் நல்ல வாய்ப்புகள் பெறுவார்கள். மேலும் அவர்களை பற்றின வதந்திகளை சாமர்த்தியமாக சமாளிப்பார்கள்.
Prev Topic
Next Topic