![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | மூன்றாம் பாகம் |
ஏப்ரல் 25, 2019 முதல் ஆகஸ்ட் 11, 2019 வரை கலவையான பலன்கள் (50 / 100)
குரு மீண்டும் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு இடம் மாறுகிறார். இதனால் தற்போதைய நிலையில் இருந்து நீங்கள் மேலும் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காண முடியாது. சனி பகவானும் வக்கிர நிவர்த்தி அடைவதால் புதிதாக எந்த பிரச்சனையும் வராது. எனினும் இது ஒரு மந்தமான காலகட்டமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு பெரிய மாற்றங்களும் நிகழாது. காதல் சம்பந்தமான விசயங்கள் சுமாராகவே இருக்கும். எனினும் புதிதாக எந்த ஒரு உறவையும் ஏற்படுத்தி கொள்ள இது ஏற்ற காலகட்டம் இல்லை. நீங்கள் தற்காலிகமாக நீங்கள் விரும்புபவரை விட்டு பிரிந்து இருந்தால் எந்த ஒரு தெளிவான முடிவும் எடுக்க முடியாமல் இருப்பீர்கள். திருமணம் ஆனவர்கள் அன்யுனியம் குறைந்து காணப் படுவார்கள். குழந்தை பேருக்கு திட்டமிடுவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அது இரு பக்கமும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும்.
நீங்கள் வேலை இல்லாமல் இருந்தால் சில வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனினும் தற்போதைய சூழலில் உங்கள் வால்வாதாரத்திர்க்காவது நீங்கள் கிடைக்கும் சம்பளத்திற்கு கிடைத்த வேலையை பார்ப்பது நல்லது. உங்கள் வேலை சுமையை நீங்கள் சமாளிப்பீர்கள். உங்கள் குடும்பத்தினர்களுடன் அதிக நேரம் செலவிட்டு அவர்களது பிரச்சனைகளை புரிந்து கொள்வீர்கள். தொழிலதிபர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். உங்களுக்கு புது ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். அதனால் பண வரத்து அதிகரிக்கும். நீண்ட தூர பயணம் செய்ய இந்த காலகட்டம் சிறப்பாக உள்ளது. எனினும் விசா ஸ்டாம்பிங் மற்றும் குடியேற்றம் குறித்து விண்ணப்பிக்க சரியான ஆவணங்கள் இருக்கின்றதா என்பதை சரி பார்த்து கொள்வது அவசியம்.
உங்கள் நிதி நிலையில் சில முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் தற்போது இருக்கும் கடனை நிதி மறுபரிசீலனை செய்து வட்டி விகிதத்தை குறைக்க முயற்ச்சிக்கலாம். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு நிதி உதவி செய்வார்கள். எனினும் நெருங்கிய உறவினர்களிடம் இருந்து கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வர்த்தகத்தில் முதலீடு செய்பவர்கள் இந்த காலகட்டத்தில் எந்த பலனையும் எதிர் பார்க்க முடியாது. அதனால் பங்கு சந்தை முதலீட்டை தவிர்ப்பது நல்லது. மேலும் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic