குரு பெயர்ச்சி (2018 - 2019) பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல்


நீங்கள் வெளிநாட்டிர்க்கோ அல்லது தொலை தூரத்திர்க்கோ பயணம் செய்ய எண்ணினால் உங்களுக்கு சரியான உதவிகள் கிடைக்காமல் போகலாம். இதனால் நீங்கள் அதிகம் தனிமையாகவும் சற்று மன அலுத்தத்தோடும் காணப் படுவீர்கள். இது உங்கள் உடல் நலத்தை பாதிப்பதோடு தேவையற்ற பயத்தையும் ஏற்படுத்த கூடும், அதனால் தொலை தூர பயணங்களை, குறிப்பாக சொந்த விசயங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
பயணச் சீட்டு பதிவு செய்வது, தாங்கும் விடுதி முன்பதிவு செய்வது போன்ற விசயங்களில் உங்களுக்கு சலுகைகள் கிடைக்காது. மேலும் நீங்கள் அசௌகரியமான இடத்தில் தங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். நீங்கள் சுப காரியங்களுக்காக பயணித்தாலும் உங்கள் செலவுகள் விண்ணைத் தோடும் அளவிற்கு உயரும், மேலும் இதனால் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் உங்களால் பயணத்தில் மகிழ்ச்சியோடு நேரம் செலவிடமுடியாமல் போகலாம், அதனால் புனிய தளங்களுக்கு செல்வது மற்றும் கோவில்களுக்கு செல்வது போன்ற பயணங்களை திட்டமிடலாம்.


நீங்கள் வெளி நாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால் உங்களுக்கு விசா குறித்த பிரச்சனைகள் ஏற்படக் கூடும், மேலும் நீங்கள் ஆகஸ்ட் 2019 வாக்கில் உங்கள் தாய் நாட்டிற்கு திரும்பும் சூழல் ஏற்படலாம். மேலும் நிரந்தர குடி உரிமை மற்றும் கிரீன் கார்டு கிடைப்பதில் சில சிக்கல்கள் ஏற்படலாம், நீங்கள் விசா ஸ்டாம்பிங் செய்வதற்கு பயணிக்க நேர்ந்தால் உங்கள் சாதக பலனை பார்த்து பின் செயல் படுவது நல்லது.


Prev Topic

Next Topic