குரு பெயர்ச்சி (2018 - 2019) வேலை மற்றும் உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

வேலை மற்றும் உத்தியோகம்


கடந்த ஒரு வருடமாக உங்கள் உத்யோகத்தில் நல்ல வளர்ச்சியையும் வெற்றியையும், குறிப்பாக ஜூலை 2018 முதல் கண்டிருப்பீர்கள். குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு அக்டோபர் 11, 2018அன்று இடம் மாறுகிறார். இதனால் அதிக பிரச்சனைகளை உங்கள் உத்தியோகத்தில் உருவாக்க கூடும். மேலும் சனி பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு பெயருவதால் மேலும் சில ஏமாற்றங்களை உருவாக்க கூடும்.
ஜீரணிக்க முடியாத அளவிற்கு உங்களுக்கு குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். இதனால் வேளையில் கவனம் செலுத்த முடியாமல் போகக் கூடும். உங்களால் கொடுத்துள்ள பணியை முடிக்க முடியாமல் போகலாம். உங்கள் மேலாளரிடம் உங்களது பிரச்சனைகளை கூறினாலும் அவர் உங்கள் வேலையை கண்டு மகிழமாட்டார். இது உங்கள் செல்வாக்கை பாதிக்க கூடும். உங்கள் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்களது பலவீனமான நிலையை தங்களுக்கு சாதகமாக எடுத்து கொண்டு அவர்களது வளர்ச்சிக்கு பயன் படுத்தி கொள்வார்கள்.


மேலும் அலுவலகத்தில் அதிகம் அரசியல் மற்றும் மறைமுக எதிரிகள் தோன்றக் கூடும். நீங்கள் பெண்கள் விடயத்தில், குறிப்பாக அலுவலகம் மற்றும் வெளி இடங்களில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்களுக்கு மேல் அதிகாரி மற்றும் மேலாளர் போன்றவர்களிடம் இருந்து பிரச்சனைகள் வரக் கூடும். இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர்களை அமைத்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. அது உங்களை பற்றி தவறான வதந்திகளை பரப்புவதோடு உங்கள் செல்வாக்கையும் கெடுக்கக் கூடும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 பிறர் முன்னிலையில் அவமானப் படக் கூடிய சூழல் ஏற்படலாம்.
அலுவலகத்தில் நீங்கள் அதிகம் இன்னல்களை சந்தித்தாலும் உங்கள் வேலையை தக்க வைத்து கொள்ள நீங்கள் அதிக பொறுமையோடு இருக்க வேண்டும். நீங்கள் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தக் கூடியவர்களை பற்றி மேல் அதிகாரிகளிடம் புகார் கூறினாலும் அது உங்களுக்கு திரும்பி பிரச்சனையாக முடியக் கூடும். எந்த அவசர முடிவும் உங்கள் உத்தியோகத்தை பாதிக்க கூடும். புது வேலை வாய்ப்பிர்க்கோ, பதவி உயர்விர்க்கோ அல்லது சம்பள உயர்விர்க்கோ இந்த காலகட்டத்தில் எதிர் பார்க்காமல் இருப்பது நல்லது. மாறாக உங்கள் வாழ்வாதாரத்திற்கு உங்கள் உத்தியோகத்தை காத்து உங்கள் குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காண நேரம் செலவிடுவது நல்லது.



Prev Topic

Next Topic