![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) தொழில் அதிபர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | தொழில் அதிபர்கள் |
தொழில் அதிபர்கள்
ஏப்ரல் 2018 வாக்கில் சிறு பின்னடைவு உங்களுக்கு ஏற்பட்டிருந்திருக்கும். எனினும் சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரித்ததால் அவ்வளவு மோசமாக நிலைமை சென்றிருக்காது. நீங்கள் ஓரளவிற்கு நன்றாகவே உங்கள் தொழிலை நடத்தி இருந்திருப்பீர்கள். தற்போது குரு உங்கள் 5ஆம் வீட்டிற்கு பெயருவதால் பல மடைந்து உங்களுக்கு அதிர்ஷ்ட்டத்தை கொடுக்க போகிறார். நீங்கள் பலமான முன்னேற்றம் மற்றும் சிறப்பான வெற்றியை அக்டோபர் 11, 2018 முதல் காண்பீர்கள். நீங்கள்தான் அதிகம் அதிர்ஷ்ட்டசாலி என்று நீங்கள் என்னும் வகையில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
உங்களுக்கு பல நீண்ட கால ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். இதனால் நிரந்தரமான பண வரத்து உங்களுக்கு ஏற்படும். உங்கள் மறைமுக எதிரிகள் பலம் இழப்பார்கள். உங்கள் போட்டியாளர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். உங்கள் தொழிலில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் லாபம் அடுத்த ஒரு வருடத்திற்கு சிறப்பாக இருக்கும். மேலும் உங்கள் தொழிலை விரிவு படுத்த இது ஒரு நல்ல காலகட்டமாகும்.
உங்கள் முதலீட்டாளர்களிடம் இருந்து நீங்கள் நிதி எதிர் பார்க்கின்றீர்கள் என்றால் அது பெப்ரவரி 2019 வாக்கில் கிடைக்கும். மேலும் நீங்கள் புதிதாக தொழில் தொடங்க முயற்ச்சித்தால் அதற்க்கு இது ஏற்ற காலகட்டமாகும். சுய தொழில் புரிவோர்கள், கமிசன் ஏஜெண்டுகள் சிறப்பாக செயல் படுவார்கள். உங்கள் புகழும் செல்வாக்கும் உயரும். உங்களுக்கு நல்ல சன்மானம் கிடைக்கும், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் நல்ல நிதிநிலையை பெறுவார்கள்.
Prev Topic
Next Topic