குரு பெயர்ச்சி (2018 - 2019) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

அக்டோபர் 11, 2018 முதல் மார்ச் 27, 2019 வரை பெரிய வெற்றி அதிக மகிழ்ச்சி (80 / 100)


குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியின் 7 ஆண்டுகளுக்கு பிறகு சஞ்சரிக்கின்றார். சனி பகவான் ஏற்க்கனவே நல்ல நிலையில் உங்கள் ராசியின் ருன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். நீங்கள் உடல் உபாதைகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்களுக்கு நல்ல தூக்கம் வரும். மேலும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். சுப காரியம் நிகழ்த்த இது சிறந்த காலகட்டமாகும்.
உங்கள் சொந்த வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். உங்கள் உறவினர்களோடு நீங்கள் நல்ல உறவு நிலையில் இருப்பீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் உங்களுக்கு ஏற்ற வரன் கிடைத்து திருமணத்திற்கு தேவையான வேலைகளை செய்வீர்கள். திருமணம் ஆனவர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள். மேலும் நீங்கள் உங்கள் மனைவி/கணவனோடு சுற்றுலா / உல்லாச பயணம் செய்ய இது ஏற்ற காலகட்டம். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர்கள் அந்த பாக்கியம் பெறுவார்கள். நீங்கள் யாரிடமாவது காதலில் விழுந்தால் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. மேலும் நீங்கள் யாரையேனும் விரும்புகிறீர்கள் என்றால் உங்கள் விருப்பத்தை சொல்ல இது ஏற்ற நேரம். மேலும் உங்களுக்கு காதல் விண்ணப்பம் வர வாய்ப்புகளும் உள்ளது.



நீங்கள் உங்கள் அலுவகத்தில் அடுத்த கட்டத்திற்கு பதவி உயர்வு பெற்றால் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. நீங்கள் புது வேலை வாய்ப்பிற்கு முயர்ச்சிக்கின்றீர்கள் என்றால் பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்திற்கு உங்களுக்கு நல்ல பதவியோடு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களது நீண்ட கால கனவுகள் மற்றும் ஆசைகள் இந்த காலகட்டத்தில் நிறைவேறும். தொழிலதிபர்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள். பணம் இனி உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது. மேலும் உங்கள் தொழிலை நீங்கள் விரிவாக்கம் செய்ய இது ஏற்ற காலகட்டமாகும். சுய தொழில் புரிவோர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகளுக்கு இது ஒரு பொற்காலம். உங்கள் விசா மற்றும் குடியேற்றம் குறித்த பலன்கள் உங்களுக்கு ஒப்புதல் பெரும்.
உங்கள் கடங்களை நீங்கள் விரைவாக அடைப்பீர்கள். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனை, வாங்கல் மற்றும் விற்றல் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் சிறப்பாக உள்ளது. ஊக வர்த்தகம் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் இந்த காலகட்டத்தில் ஒரு கொட்டீஸ்வரராக வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்ட்ட சீட்டு வெற்றி பெறுவது உங்கள் பிறந்த ஜாதக பலனை பொறுத்தே உள்ளது. நீங்கள் ஒரு திரை நட்ச்சத்திரமாக இருந்தால் உங்களுக்கு நல்ல பெயரும் புகழும் உங்கள் துறையில் கிடைக்கும்.





Prev Topic

Next Topic