![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | நான்காம் பாகம் |
ஆகஸ்ட் 11, 2019 முதல் நவம்பர் 04, 2019 வரை பொற்காலம் (90 / 100)
குரு 5ஆம் வீட்டிலும் சனி பகவான் மற்றும் கேது 6ஆம் வீட்டிலும் அம்ற்றும் கேது 12ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது உங்களுக்கு ராஜா யோகத்தை இந்த காலகட்டத்தில் தர உள்ளது. இது உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும். நீங்கள் வாழ்க்கையில் அதிகம் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். உங்கள் நீண்ட கால கனவுகள் மற்றும் ஆசைகள் நினைவாகும்.
திருமணம் ஆன தம்பதியினர்கள் அன்யுநியத்தொடு இருப்பார்கள். குழந்தை பேருக்கு முயற்ச்சிக்க இது ஏற்ற காலகட்டமாகும். புது உறவுகளை ஏற்படுத்தி கொள்ள இது ஏற்ற காலகட்டமாகும். சுப காரியம் நிகழ்த்த இது சிறந்த காலம். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரும் புகழும் பெரும். உங்கள் மனைவி/ கணவன் வீட்டாருடன் நல்ல உறவு நிலையில் இருப்பீர்கள். மேலும் குடும்பத்தினர்களுடன் சுற்றுலா செல்ல இது ஏற்ற காலகட்டமாகும்.
உங்கள் உத்தியோகத்தில் நல்ல வெற்றி பெறுவீர்கள். உங்கள் வளர்ச்சியை மற்றும் முன்னேற்றத்தை கண்டு பிறர் பொறாமை படக் கூடும். உங்களுக்கு மறைமுக எதிரிகள் இருக்க மாட்டார்கள். மேலும் அலுவலகத்தில் அரசியல் இருக்காது. நீங்கள் சரியான பாதையில் சென்று பெரிய அளவில் வெற்றி பெறுவீர்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபம் காண்பார்கள். நீங்கள் புதிதாக நிறுவனம் தொடங்க எண்ணினால் அதனை நீங்கள் இந்த காலகட்டத்தில் செய்யலாம்.
உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும்/ நீங்கள் உங்கள் அனைத்து கடன் பிரச்சனைகளிலும் இருந்து வெளி வருவீர்கள். உங்கள் வங்கி கடன் எந்த ஒரு சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். மேலும் புது வீடு வாங்கி குடி ஏற இது சிறப்பான காலகட்டமாகும். முதலீட்டாளர்கள் மற்றும் நீண்டகாலம் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் நல்ல லாபம் காண்பார்கள். நாள் வர்த்தகம் மற்றும் ஊக வர்த்தகம் செய்பவர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள். எனினும் இந்த காலகட்டத்தை பயன் படுத்தி கொண்டு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செட்டில் ஆகா முயற்ச்சிப்பது சிறப்பு.
Prev Topic
Next Topic