குரு பெயர்ச்சி (2018 - 2019) ஆரோக்கியம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

ஆரோக்கியம்


கடந்த ஒரு வருடம் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைத்திருக்கும். குரு மற்றும் ராகு நல்ல நிலையில் இல்லை என்றாலும், சனி பகவான் உங்களுக்கு நல்ல உடல் நலத்தை தந்திருப்பார். கடந்த மாதங்களில் உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டிருந்தாலும் உங்கள் சக்தி குறையாமல் நீங்கள் உங்கள் வேலைகளை செய்திருப்பீர்கள்.
சனி பகவான் நல்ல நிலையில் இருக்கும் நேரத்தில், குரு பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீடான ஜென்ம ராசிக்கு இடம் மாறுகிறார். இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. மேலும் ராகு பெயர்ச்சி மார்ச் 2019ல் நிகழ இருப்பதால் மேலும் நேர்மறை சக்திகள் உங்களுக்கு அதிகரிக்கும். நீங்கள் உங்கள் உடல் நல பிரச்சனைகள் ஏதேனும் ஏற்பட்டால் அதனை உடனே சரி செய்து விடுவீர்கள். உங்களுக்கு தக்க மருத்துவம் கிடைத்து விரைவாக குணமடைவீர்கள். கடந்த மாதங்களில் எந்த உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தாலும் அது குருவின் பலத்தால் விரைவில் குணமடையும்.


உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலமும் சீராக இருக்கும். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். தினமும் லலிதா சஹாசார நாமம் கேட்பது உடல் நலத்தை அதிகரிக்கும்.


Prev Topic

Next Topic