![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 27, 2019 முதல்ஏப்ரல் 25, 2019 வரை குறிப்பிட தக்க பின்னடைவு (40 / 100)
இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் ராசியின் ருன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். சனி பகவான் , கேது மற்றும் குரு இணைந்து உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சில எதிர் பாராத தடைகளை ஏற்படுத்த கூடும். இது குறிப்பாக தீய கண் பார்வை உங்கள் மீது படுவதால் கூட இருக்கலாம். பிறர் உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றி கண்டு அதிகம் பொறாமை படக் கூடும். நீங்கள் தினமும் சுதர்சன மகா மந்திரம் கேட்பது சற்று ஆறுதலாக இருக்கும்.
எனினும் உங்கள் வளர்ச்சியில் எந்த பாதிப்பும் இருக்காது. எனினும் உங்கள் வளர்ச்சி இந்த காலகட்டத்தில் சற்று மிதமாகக் கூடும். எனினும் அதை நீங்கள் மனதளவில் ஏற்று கொள்வதற்கு சற்று கடினமாக கருதுவீர்கள். அக்டோபர் 2018 முதல் மார்ச் 2019 நீங்கள் அதிக நற் பலன்களை பார்த்ததால் இந்த காலகட்டத்தில் ஏற்பாடு சில பின்னடைவுகள் உங்களை மனதளவில் பாதிப்பது எதார்த்தமே. இந்த காலகட்டத்தில் உங்கள் மறைமுக எதிரிகள் உங்கள் பலவீனத்தை பயன் படுத்தி கொண்டு உங்கள் வளர்ச்சியை கெடுக்கு முயல்வார்கள்.
இந்த காலகட்டத்தில் எந்த ஒரு சுப காரியங்களும் செய்வதை தவிர்ப்பது நல்லது. உங்கள் மனைவி / கணவனோடு எந்த ஒரு தேவையற்ற வாக்குவாதமும் செய்யாமல் இருப்பது நல்லது. மேலும் பிரச்சனைகளை சமாளிக்க நீங்கள் அதிகம் பொறுமையோடு இருக்க வேண்டும். காதலர்கள் காதலை தவிர அதிகம் சவால்களை சந்திப்பார்கள். உங்கள் அலுவலகத்தில் அரசியல் அதிகரிக்க கூடும். எனினும் நீங்கள் அந்த அரசியலை சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சிறப்பாக சமாளிப்பீர்கள். தொழிலதிபர்கள் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரலாம். பங்கு சந்தை முதலீடு முக்கிய கிரகங்கள் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர் பார்த்த பலங்களை தருவது சந்தேகமே.
Prev Topic
Next Topic