![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | மூன்றாம் பாகம் |
ஏப்ரல் 25, 2019 முதல் ஆகஸ்ட் 11, 2019 வரை சில பின்னடைவுகள் தொடரும் (50 / 100)
சனி பகவான் மற்றும் குரு இந்த காலகட்டத்தில் வக்கிர கதி அடைகிறார்கள். அதனால் உங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் இந்த காலகட்டத்தில் தொடர வாய்ப்பு உள்ளது. நீங்கள் வாயிற்று வழி, எலும்பு வழி மற்றும் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளால் அவதிப் படக் கூடும். தினமும் ஹனுமன் சலிச கேட்பது உங்களுக்கு ஏற்படும் தேவையற்ற பயம் மற்றும் பதற்றத்தை தவிர்க்க உதவும். உங்கள் மனைவி / கணவன் மற்றும் தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நீங்கள் யாரையேனும் விரும்புகிறீர்கள் என்றால் உங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் நிகழும் அரசியலால் விசயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்க வாய்ப்பு இல்லை. நீங்கள் இத்தகைய சூழ்நிலைகளை சுமூகமாக சமாளிக்க அதிகம் பொறுமையோடு இருக்க வேண்டும். காதல் திருமணத்திற்கு உங்கள் பெற்றோர்களை சம்மதிக்க வைக்க நீங்கள் அதிகம் போராட வேண்டி இருக்கும். கருவுற்ற பெண்கள் இந்த காலகட்டத்தில் தங்களது உடல் ஆரோக்கியத்தில் அதிகம் அக்கறை செலுத்த வேண்டும். உங்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது. அதனால் உங்கள் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் உங்களுக்கு இந்த காலகட்டம் முழுவதும் உறுதுணையாக உடன் இருக்கும் படி பார்த்து கொள்வது நல்லது. சுப காரியங்களை தள்ளி வைப்பது நல்லது. அது சில பதற்றத்தை ஏற்படுத்த கூடும்.
சமீப காலத்தில் உங்களுக்கு கிடைத்த பதவி உயர்வு காரணத்தால் நீங்கள் அதிக கவனத்தோடும், போருப்புகலோடும் வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். உங்கள் வேலை சுமை அதிகரிக்கும். நீங்கள் அதிக நேரம் அலுவலகத்தில் இருந்து பணிகளை முடிக்க வேண்டிய சூழல் ஏற்படலா. எனினும் உங்களது இந்த கடினமான உழைப்பிற்கு ஏற்ற சன்மானம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். தொழிலதிபர்கள் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் உங்கள் வளர்ச்சி பாதிக்க கூடும். நீங்கள் உங்கள் ப்ரோஜெக்ட்டை தக்க சமயத்தில் முடிக்க அதிக கடினமாக உழைக்க வேண்டும்.
மருத்துவம் மற்றும் பயணம் குறித்த விசயங்களால் உங்கள் செலவுகள் அதிகரிக்க கூடும். நீங்கள் உங்கள் செலவுகளை அதிகம் கண்காணிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே உங்களால் சேமிக்க முடியும். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது. உங்கள் வங்கி கடன் ஒப்புதல் பெற தாமதம் ஆகக் கூடும். நீங்கள் மேலும் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய தேவை ஏற்படலாம். முடிந்த வரை பங்கு சந்தை முதலீட்டை தவிர்ப்பது நல்லது. நாள் வர்த்தகம் செய்பவர்கள் உங்கள் ஜாதக பலனை பார்த்து பின் முதலீடு செய்வது நல்லது.
Prev Topic
Next Topic