![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் |
பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல்
குரு பகவான் உங்கள் பாக்ய ஸ்தானத்தை பார்வை இடுகிறார். இது தொலை தூர பயணங்களில் உங்களுக்கு சாதகமான பலனைத் தரும். உங்கள் தொழில் சம்பந்தமான பயணம் உங்களுக்கு வெற்றி தரும். உங்கள் குடுமத்தினர்களுடன் விடுமுறையை கழிப்பதில் அதிகம் மகிழ்ச்சி காண்பீர்கள். மேலும் தாங்கும் விடுதி மற்றும் பயண சீட்டு முன் பதிவு செய்வதில் உங்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும். மேலும் உங்களுக்கு சௌகரியம் அதிகமாக இருக்கும். நல்ல உடல் நலத்தோடு இருப்பீர்கள்.
குடியேற்றம் குறித்து நல்ல பலன்களை பெறுவீர்கள். உங்களுக்கு விசா மற்றும் வேலைக்கான H1B புதிப்பித்தல் போன்றவை எதிர் பார்த்த படி கிடைக்கும். நீங்கள் கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற எண்ணினால் அதற்க்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கும். மேலும் வெளி நாட்டிற்கு உங்கள் குடும்பத்தினர்களுடன் நீங்கள் குடிபெயரவும் இது ஏற்ற காலகட்டமாகும்.
Prev Topic
Next Topic