![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) வேலை மற்றும் உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | வேலை மற்றும் உத்தியோகம் |
வேலை மற்றும் உத்தியோகம்
குரு பகவான் உங்கள் ராசியின் 4ஆம் இடத்தில் இருந்த கடந்த பெயர்ச்சியில் ஒரு மிதமான வளர்ச்சியை உங்களுக்கு தந்திருப்பார். எனினும் அனேகமானோர் கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால் அதிகம் வருத்தம் அடைத்து இருப்பீர்கள். குரு பகவான் தற்போது உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து அனைத்தையும் நிறைவேற்றுவார். மேலும் உங்கள் எண்ணங்கள் நிறைவேருவதொடு நீண்ட கால பலன்களையும் பெறுவீர்கள். உங்களுக்கு இந்த பெயர்ச்சி காலத்தில் நிச்சயம் பதிவியில் உயர்வு ஏற்படும். பெப்ரவரி 2019க்குள் நீங்கள் எதிர் பார்த்த நல்ல மாற்றங்கள் ஏற்படவில்லை என்றால் எதோ உங்கள் பிறந்த சாதகத்தில் குறை உள்ளது என்றே அர்த்தம். அதனால் நீங்கள் ஒரு நல்ல சோதிடரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
புது வேலைக்கு முயற்சி செய்ய இது ஏற்ற காலகட்டமாகும். நீங்கள் உங்கள் நேர்காணலை வெற்றிகரமாக முடித்து எதிர் பார்த்த வேலை வாய்ப்பை பெறுவீர்கள். மேலும் நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்திற்கு உங்களுக்கு வேலை கிடைக்கும். புது வேலை வாய்ப்பு நீங்கள் விரும்பிய இடத்தில் கிடைக்கும். வெளி நாட்டிற்கு செல்ல இது ஏற்ற காலகட்டமாகும். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் மற்றும் உங்கள் மேலாளர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் கடினமான உழைப்பு அங்கிகாரம் பெரும். அதற்க்கு ஏற்ற சன்மானமும் உங்களுக்கு கிடைக்கும்.
உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் உங்களுக்கு நிர்வாகம் சம்பந்தமான வேலை கிடைக்கும். உங்கள் ஒப்பந்தப் படியான வேலை நிரந்தரமாகும். ஏதேனும் வழக்கு ஏற்பட்டு அது நிலுவையில் இருந்தால் அதில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உங்களுக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. இன்சூரன்ஸ், பங்கு சந்தை, குடியேற்றம், விசா போன்ற விசயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் உத்தியோகத்தில் ஏற்படும் வளர்ச்சி அடுத்த ஒரு வருடத்திற்கு நல்ல வெற்றியை உங்கள் நிதி நிலையில் ஏற்படுத்தும்.
Prev Topic
Next Topic