![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (ஐந்தாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | ஐந்தாம் பாகம் |
செப்டம்பர் 17, 2019 முதல் நவம்பர் 04, 2019 வரை நிதி நிலையில் கவனம் தேவை(50 / 100)
கடந்த பாகங்களில் உங்களுக்கு கிடைத்த சிறப்பான பலன்கள் இந்த பாகத்தில் குறையும். ஏழரை சனியின் தாக்கம் அதிகம் உணரப் படும். எனினும் உங்கள் உடல் நலத்தில் பெரிதாக எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. உங்கள் தூக்கம் சற்று பாதிக்க கூடும். எனினும் த்யானம் மற்றும் மூச்சு பயிர்ச்சு செய்வதால் அதனை நீங்கள் சரி செய்து விடலாம். உங்கள் மனைவி / கணவன் உங்கள் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார். உங்கள் வேலை சுமை அதிகமாக இருக்கும். உங்கள் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்கள் அதிவேக வளர்ச்சி மற்றும் வெற்றியை கண்டு பொறாமை படுவார்கள். அதனால் உங்களுக்கு மறைமுக எதிரிகள் தோன்ற கூடும். நீங்கள் அலுவலகத்தில் ஏற்படும் அரசியலை சமாளிக்க அதிக நேரம் செலவிட வேண்டும்.
உங்கள் நிதி நிலை மற்றும் முதலீடுகள் உங்களுக்கு சில நட்டத்தை ஏற்படுத்த கூடும். அது நீங்கள் சரியாக திட்டமிடாததாலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்கள் ஜாதக பலனை பார்த்து பின் நிதி குறித்த எந்த ஒரு முக்கிய முடிவும் எடுப்பது நல்லது. நீங்கள் உங்கள் பங்கு சந்தை முதலீட்டை தவிர்த்து விட்டு சேமிப்பு, அரசு பத்திரம், நிரந்தர வைப்பு நிதி போன்ற வற்றில் முதலீடு செய்யலாம்.
உங்களுக்கு 2௦2௦ ஜனவரி மாதம் முதல் ஜென்ம சனி தொடங்கி விடும். அதனால் வரும் வருடங்கள் உங்களுக்கு சிறப்பாக இல்லை. மேலும் தற்போது இருக்கும் நல்ல காலகட்டத்தை பயன் படுத்தி கொண்டு நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவது நல்லது.
Prev Topic
Next Topic