குரு பெயர்ச்சி (2018 - 2019) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி)

நிதி / பணம்


குரு பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிலும் சனி பகவான் 12ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது உங்கள் சேமிப்பை கரைக்கும். உங்களுக்கு கிரெடிட் கார்டு மற்றும் வங்கி கடன் ஆகியவற்றால் கடன் சேர்ந்திருந்தால் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. குரு உங்கள் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் கடனை குறைக்க உதவுவார். பணம் பல வலிகளில் இருந்து வரும். வெளிநாடுகளில் இருந்தும் உங்களுக்கு பணம் வரும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்கள் நிதி பிரச்சனைகளை தீர்க்க உதவி செய்வார்கள்.
உங்கள் உத்தியோகத்தில் இருந்து வரும் வருமானம் அதிகரிக்கும். செலவுகள் குறையும். இது உங்களுக்கு உங்கள் கடனை விரைவில் அடைக்க உதவும். மேலும் சேமிப்பு அதிகரிக்கும். நீங்கள் உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்து வட்டி விகிததத்தை குறைப்பீர்கள். உங்கள் கிரெடிட் கார்டு மற்றும் வங்கி கடன் எந்த ஒரு தடையும் இன்றி ஒப்புதல் பெரும்.


போதுமான அளவு மருத்துவ காப்பீடு, வாகனம் மற்றும் சொத்து காப்பீடு உள்ளதா என்று பார்த்து கொள்வது நல்லது. ஜென்ம சனி உங்களுக்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்தி உங்கள் செலவுகள அதிகப் படுத்தக் கூடும். புது வீடு வாங்க இது ஏற்ற காலகட்டம். எனினும் நீங்கள் சந்தை விலையை விட அதிகம் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். சொத்துக்களில் முதலீடுகள் செய்வது நல்ல யோசனை அல்ல. எனினும் நீங்கள் முதன் முதலில் வாங்கும் வீட்டிற்கு குடி பெயரலாம். அதில் நீங்கள் குறைந்தது 6 வருடங்கள் வரை வசிக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது. அது ஓரளவிர்க்காயினும் உங்களுக்கு லாபத்தை தரும்.


Prev Topic

Next Topic