![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | முதல் பாகம் |
அக்டோபர் 11, 2018 முதல் மார்ச் 27, 2019 வரை வெற்றி மற்றும் மகிழ்ச்சி(70 / 100)
குரு பகவான் உங்கள் ராசியின் லாப ஸ்தானத்திற்கு இடம் மாறுவது ஏழரை சனியின் தாக்கத்தை குறைக்கும். நீங்கள் இந்த காலகட்டத்தில் நல்ல பலன்களை காண்பீர்கள். அதிக நேர்மறை சக்திகளை பெறுவீர்கள். மேலும் உடல் நல உபாதைகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்கள் குடும்பத்தினர்களுடன் இருக்கும் உறவுநிலையில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்திருந்தால் தற்போது அவர்களுடன் சேர்ந்து வாழ நல்ல நேரம். உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமண முயற்சி செய்ய இது ஏற்ற காலகட்டமாகும். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள்.
திருமணம் ஆனவர்கள் நல்ல அன்யுனியத்தோடு இருப்பார்கள். குழந்தை பேருக்கு நீங்கள் திட்டமிடலாம். மேலும் IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சை பெற விரும்பினால் உங்கள் ஜாதக பலனை பார்த்து பின் முயற்ச்சிப்பது நல்லது. காதல் விசயங்கள் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. நீங்கள் காதலில் விழுந்தாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.
நீங்கள் புது வேலை வாய்ப்பிற்கு முயற்ச்சித்தால் உங்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நல்ல சம்பளம் மற்றும் பதவியும் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து நீங்கள் சிறப்பாக செயல் படுவீர்கள். உங்கள் பண வரத்து அதிகரிக்கும். முதலீட்டாளர்கள் மற்றும் வங்கி கடன் போன்றவற்றால் உங்களுக்கு தேவையான நிதி கிடைக்கும்.
குரு உங்கள் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது நீங்கள் விரைவாக உங்கள் கடனை அடைக்க உதவும். மேலும் வங்கி கடன் அல்லது கிரெடிட் கார்டு போன்றவற்றிக்கு நீங்கள் தற்போது விண்ணப்பம் செய்யலாம். உங்கள் பங்கு சந்தை முதலீடு உங்களுக்கு லாபம் தரும். மேலும் புது வீடு வாங்க அல்லது ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்ய இது ஏற்ற காலகட்டமாகும்.
Prev Topic
Next Topic