![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | நான்காம் பாகம் |
ஆகஸ்ட் 11, 2019 முதல் செப்டம்பர் 17, 2019 வரை சிறப்பான பலன்கள் (80 / 100)
குரு, சனி பகவான் மற்றும் ராகு சிறப்பான நிலையில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களை தருவார்கள். நீங்கள் உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நல்ல மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை உயரும். உங்கள் மனைவி / கணவன் மற்றும் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு குழந்தை பேரு பெறுவதற்கான பாக்கியம் கிடைக்கும்.
திருமணம், குழந்தை பேரு, புது வீடு புகு விழ, மற்றும் நிச்சயம் செய்வது போன்ற சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற காலகட்டமாக இருக்கும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் உங்களுக்கு ஏற்ற வரன் கிடைத்து திருமணம் நடக்கும். காதலர்களுக்கு இது சிறப்பான நேரம். நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். மேலும் அவர்களுடன் விழாக்கள் மற்றும் சுற்றுலா பயணம் போன்றவற்றிக்கு செல்வீர்கள்.
நீங்கள் உங்கள் வேலை சுமையை சிறப்பாக சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் எந்த ஒரு அரசியலும் இருக்காது. மேலும் உங்களுக்கு பதவி உயர்வோடு சம்பள உயர்வும் கிடைக்கும். நீங்கள் புது வேலை வாய்ப்பிற்கு முயற்ச்சித்தால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழிலதிபர்கள் சமீப காலத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து வெளி வருவார்கள். நீங்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். எனினும் உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் கவனத்தோடு செயல் படுவது அவசியம்.
உங்கள் வங்கி கணக்கில் போதுமான சேமிப்பு இருக்கும். உங்களுக்கு எந்த ஒரு கடனும் இருக்காது. உங்கள் வீட்டு கடன் எந்த ஒரு சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். ஊக வர்த்தகம் உங்களுக்கு லாபகரமாக இருக்கும், எனினும் செப்டம்பர் 2019 இரண்டாம் வாரத்தோடு நீங்கள் பங்கு சந்தை முதலீடு செய்வதில் இருந்து வெளி வர வேண்டும்.
Prev Topic
Next Topic