![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) ஆரோக்கியம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | ஆரோக்கியம் |
ஆரோக்கியம்
சாதகமற்ற குரு மற்றும் சனி பகவான் செவ்வாய் மற்றும் கேது ஆகிய கிரகங்கள் இணைந்து மே 2018 முதல் சஞ்சரித்ததால் உங்கள் உடல் நலம் பாதித்திருந்திருக்க கூடும். ராகு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் கடந்த ஒரு வருடம் சஞ்சரித்து தேவை இல்லாமல் பிரச்சனைகளை அதிகரித்திருந்திருக்க கூடும். உங்களுக்கு சிறு உடல் நல பிரச்சனைகள் இருந்தாலும் அதனை சரி செய்வது உங்களுக்கு கடினமாக இருந்திருக்க கூடும்.
தற்போது குரு பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு அக்டோபர் 11, 2018 முதல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். உங்கள் உடல் நல பிரச்சனைகள் குறையும். ஏழரை சனி காலத்தின் தாக்கம் குறைவாக இருக்கும். ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு மார்ச் 2019 வாக்கில் பெயருவதால் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. குரு பகவான் உங்களுக்கு தக்க மருந்து கிடைத்து விரைவில் குணமடைய உதவி செய்வார். உங்களுக்கு குருவின் பலம் கிடைத்ததை எண்ணி நீங்கள் மகிழ்ச்சி அடையலாம்.
நீங்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் நவம்பர், 6, 2018 வரை காத்திருப்பது நல்லது. நீங்கள் ஏற்க்கனவே அறுவை சிகிச்சை செய்திருந்தால் விரைவாக குணமடைவீர்கள். ஹனுமன் சலிச மற்றும் லலிதா சஹசர நாமம் கேட்பது சற்று ஆறுதலாக இருக்கும்.
Prev Topic
Next Topic