![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
கடந்த ஒரு வருடமாக குரு பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் இடத்தில் சஞ்சரித்தார். மேலும் உங்களுக்கு ஏழரை சனி காலம் நடந்து கொண்டிருப்பதால் நீங்கள் உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் பெரிய பின்னடைவுகளை கண்டிருப்பீர்கள். ராகு உங்கள் ராசியின் 7ஆம் இடத்திலும் கேது ஜென்ம ராசியிலும் சஞ்சரித்து உங்கள் பிரச்சனைகளின் தாக்கத்தை அதிகப் படுத்தி இருந்திருக்க கூடும். செவ்வாய் மற்றும் கேது இணைந்து உங்கள் மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் அதிகப் படுத்தி இருந்திருப்பார்கள்.
தற்போது குரு பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு இடம் மாறுகிறார். ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கும் கேது 12ஆம் வீட்டிற்கும் இடம் மாறுகிறார்கள். முக்கிய கிரகங்கள் அடுத்த 12 மாதங்களுக்கு உங்களுக்கு சாதகமான நிலையில் சஞ்சரிக்க உள்ளனர். இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. குரு ஏழரை சனியின் தாக்கத்தை குறைப்பார். சனி பகவான் உங்களுக்கு பல தடைகளை கொடுத்தாலும் குரு பகவான் பிரச்சனைகளை சமாளிக்க உங்களுக்கு உதவுவார். உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் குருவின் பலத்தால் முன்னேற்றம் ஏற்படும்.
ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு மார்ச் 2019ல் பெயரும் போது உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உங்கள் குடும்பத்தினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். எனினும் நீங்கள் முதலீடு ஏதேனும் செய்ய விரும்பினால் உங்கள் பிறந்த ஜாதகத்தின் பலன் பார்த்து செயல் படுவது நல்லது. குறிப்பாக நிலம் வாங்குவது போன்ற விசயங்களை உங்கள் ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று பின் செய்வது நல்லது. மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை தர உள்ளது. உங்கள் உத்தியோகம், நிதி நிலை மற்றும் குடும்ப சூழலில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.
Prev Topic
Next Topic