குரு பெயர்ச்சி (2018 - 2019) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி)

ஏப்ரல் 25, 2019 முதல் ஆகஸ்ட் 11, 2019 வரை தேக்க நிலை (40 / 100)


குரு மற்றும் சனி பகவான் இந்த காலகட்டத்தில் வக்கிர கதி அடைவார்கள். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால் ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களை தருவார். கேது 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு ஜோதிடம் கடவுள் வழிபாடு, மற்றும் த்யானம் போன்றவற்றில் ஆர்வத்தை ஏற்படுத்துவார். உங்கள் தூக்கம் பாதிக்க கூடும். உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
திருமணம் ஆனவர்கள் அன்யுனியம் குறைந்து காணப் படுவார்கள். எனினும் குழந்தை பேரு பெறுவதற்கான பலன்கள் உங்களுக்கு உண்டு. திருமணம் ஆன பெண்கள் கருவுற்றிருந்தாள் உங்களுடன் பெற்றோர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் உடன் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காதலர்கள் கலவையான பலன்களை பெறுவார்கள். எனினும் காதல் திருமணத்திற்கு நீங்கள் உங்கள் பெற்றோர்களின் சம்மதம் பெறுவது சற்று கடினமான விடயமாகும்.


உங்கள் அலுவலகத்தில் தேவையற்ற மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் கடினமாக உழைத்து இந்த காலகட்டத்தை கடக்க வேண்டும். மேலும் அதிக நேரம் வேலை பாருத்து உங்கள் ப்ரோஜெக்ட்டை முடிக்க வேண்டும். உங்கள் கடின உழைப்பிற்கான பலன்களை நீங்கள் நிச்சயம் வரும் காலத்தில் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் முன்னேற்றத்தில் சற்று தாமதத்தை காண்பார்கள். சிறிது தாமதம் ஆனாலும் நீங்கள் நட்டத்தில் இருந்து வெளி வருவீர்கள். எனினும் உங்கள் பிறந்த ஜாதகம் பலவீனமாக இருந்தால் சில இழப்புகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
குடியேற்றம் குறித்த பலன்கள் பெறுவதில் சற்று சிக்கல்கள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் விசா ஸ்டாம்பிங் செய்ய முயர்ச்சிப்பதை தவிர்ப்பது நல்லது. அதிகரிக்கும் செலவுகள் உங்கள் சேமிப்பை விரைவாக குறைக்க கூடும். உங்கள் முதலீடு உங்களுக்கு இழப்பையும் ஏமாற்றத்தையும் கொடுக்க கூடும். ஊக வர்த்தகம் செய்ய இது ஏற்ற காலகட்டம் இல்லை, நீண்ட கால முதலீடு செய்பவர்கள் சில நட்டத்தை ஏற்படுத்த கூடும்.



Prev Topic

Next Topic