![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
உங்களுக்கு வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் நல்ல சிறப்பான பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு ஏற்பட்ட நட்டத்தில் இருந்து வெளி வருவீர்கள். குரு பகவானின் பலத்தால் உங்களுக்கு ஓரளவிர்க்காயினும் லாபம் கிடைக்கும். நாள் வர்த்தகம் மற்றும் ஊக வர்த்தகம் செய்ய இது ஏற்ற தருணம் இல்லை. ஏனென்றால் சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் வசித்து குருவால் உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்ட்டத்தை தொடைக்க கூடும். குறிப்பாக உங்கள் மகா தசை பலவீனமாக இருக்கும் போது.
நீண்ட கால முதலீடுகள் செய்பவர்கள் சிறப்பாக செயல் படுவார்கள். நாள் வர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது. அது பண நட்டத்தை ஏற்படுத்தக் கூடும். மேலும் அதிகரிக்கும் நாட்டத்தால் நீங்கள் மன அமைதி இன்றி இருக்கக் கூடும். அரசு பத்திரம் போன்றவற்றில் உங்கள் முதலீடுகளை செய்வது நல்லது. அதிர்ஷ்ட்ட சீட்டு போன்றவற்றில் பணம் செலவு செய்து உங்கள் அதிர்ஷ்ட்டத்தை முயற்ச்சித்து பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.
ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்வதை தற்போது தவிர்ப்பது நல்லது. நீங்கள் ஏமாற்ற படலாம். எனினும் முதலீடு செய்ய விரும்பினால் உங்கள் சாதக பலனை பார்த்து அதன் பின் முயற்சி செய்வது நல்லது.
Prev Topic
Next Topic