![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) தொழில் அதிபர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | தொழில் அதிபர்கள் |
தொழில் அதிபர்கள்
குரு பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு பெயருவதால் நீங்கள் தற்போது சோதனை காலத்தில் இருக்குறீர்கள். இதனால் உங்கள் தொழிலை மேற்கொண்டு நடத்த உங்களது சாதக பலனை பார்த்து அதன் படி நடந்து கொள்வது நல்லது. ஏனென்றால் முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு மற்றும் கேது நல்ல நிலையில் உங்கள் ராசியில் இல்லை. இதனால் உங்கள் தொழிலில் சில மந்தமான சூழல் ஏற்படக் கூடும். இந்த காலகட்டத்தில் நல்ல சாதக பலன் இல்லாமல் மேற்கொண்டு உங்கள் தொழிலை நீங்கள் நடத்துவது நல்ல யோசனை இல்லை.
நீங்கள் நீண்ட காலமாக இருந்த நல்ல வாடிக்கையாளர்களை சிறிய காரணங்களுக்காக இழக்க நேரிடலாம். இது உங்கள் பண வரத்தை பாதிக்க கூடும். உங்கள் நிதி தேவைகளை சந்திக்க கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். மேலும் அரசு ஏற்படுத்தும் சில திட்டங்கள் மற்றும் மாற்றங்களால் உங்கள் தொழில் பாதிக்கப் படக் கூடும். மேலும் உங்களிடம் வேலை பார்க்கு நிரந்தர பணியாளர்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்வதால் உங்கள் தொழில் பாதிக்கப் படக் கூடும்.
உங்களது ப்ரோஜெக்ட்டை தக்க சமயத்தில் முடிக்க முடியாமல் போகலாம். இத்தகைய சூழல் உங்களுக்கு மன அழுத்தத்தை தரக் கூடும். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய சூழலும் ஏற்படலாம். இது உங்கள் செல்வாக்கை பாதிக்க கூடும். உங்கள் போட்டியாளர்கள் இத்தகைய சூழலை அவர்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்ள முயர்ச்சிபார்கள். உங்கள் தொழிலை விரிவு படுத்தும் என்னத்தை தற்போது கை விடுவது நல்லது. மேலும் முடிந்த வரை நிர்வாக செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் கடினமாக வேலை பார்த்தால் தான் எதிர்பார்த்த பலனில் சிறிதேனும் கிடைக்கும். எனினும் உங்கள் பெயர் கெடாமல் பார்த்து கொள்வது அவசியம்.
Prev Topic
Next Topic