குரு பெயர்ச்சி (2018 - 2019) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

அக்டோபர் 11, 2018 முதல் மார்ச் 27, 2019 வரை உடல் நலம், நிதி பிரச்சனைகள் , மற்றும் மறைமுக எதிரிகள் (35 / 100)


குரு பகவான் உங்கள் பூர்வ புண்ய ஸ்தானத்தில் இருந்து ருன ரோக சத்ரு ஸ்தானத்திற்கு அக்டோபர் 11, 2018 அன்று இடம் மாறுகிறார். இது உங்களுக்கு நல்ல செய்தி அல்ல. உங்கள் மனைவி / கணவன் மற்றும் குடும்பத்தினர்களின் உடல் நலம் பாதிக்க கூடும். நீங்கள் சில தருணங்களில் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். போதுமான அளவு மருத்துவ காப்பீடு உள்ளதா என்பதை பார்த்து கொள்வது நல்லது.
உங்கள் வாழ்க்கை துணைவர் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க மாட்டார். நீங்கள் புதிதாக திருமணம் ஆனவராக இருந்தால் உங்களுக்கு அன்யுனியம் குறைந்து காணப் படும். உங்கள் பிறந்த ஜாதகம் பலவீனமாக இருந்தால் நீங்கள் தற்காலிகமாக பிரியும் சூழல் ஏற்பட கூடும். உங்கள் மனைவி / கணவன் வீட்டார்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும். நீங்கள் யாரையேனும் விரும்புகிறீர்கள் என்றால் அதிக பொறுமையோடு இருந்து உங்கள் உறவை தக்க வைத்து கொள்ள நீங்கள் முயற்ச்சிக்க வேண்டும். இல்லை என்றால் இரு குடும்பத்தினர்களுக்கு இடையே சண்டை ஏற்பட வாய்ப்பு உள்ளது.


உங்கள் வேலை சுமை அதிகரிக்கும். நீங்கள் முக்கியத்துவம் இல்லாத ப்ரோஜெக்ட்டில் பனி புரிய கட்டாயப் படுத்த படுவீர்கள். அலுவலகத்தில் அரசியில் அதிகரிக்கும். அலுவலகத்தில் ஏற்பாடு புது மாற்றங்கள், அதாவது புது மேலாளர் அல்லது புது ப்ராஜெக்ட் போன்றவை உங்கள் வளர்ச்சியை பாதிக்க கூடும். இவ்வாறு ஏற்படும் மாற்றங்கள் உங்களை வறுத்த பட செய்யும். உங்கள் முதலாளி உங்களை அதிகம் கண்காணிப்பார்.
தொழிலதிபர்கள் உங்கள் தொழிலை நல்லபடியாக நடத்து உங்கள் ஜாதக பலன் நன்றாக இருக்க வேண்டும். போட்டியாளர்களால் அதிகம் அழுத்தம் ஏற்படும். சிறு காரணங்களால் நீங்கள் உங்கள் ப்ரோஜெக்ட்டுகளை இழக்க கூடும். இந்த காலகட்டத்தில் உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்வதை பற்றி எண்ணுவதை தவிர்ப்பது நல்லது. முடிந்த வரை ரிஸ்க் எடுப்பதை தவிர்த்து உங்கள் பங்குகளை பணமாக்கி கொள்வது நல்லது. எனினும் நல்ல ஜாதக பலன் உள்ள உங்கள் குடும்பத்தினர் பெயரை இணைத்து கொள்வது சற்று நல்ல சூழலை ஏற்படுத்த கூடும்.


வழக்கு குறித்த விசயங்களில் உங்களுக்கு சாதகமற்ற பலன்கள் கிடைக்க கூடும். நீங்கள் முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. உங்கள் செலவுகள் விண்ணை தோடும் அளவிற்கு உயரக் கூடும். உங்கள் சேமிப்பு விரைவாக குறையக் கூடும். உங்கள் கிரெடிட் கார்டு நிலுவை அதிகரிக்க கூடும். அதிகரிக்கும் கடன் உங்களை அச்சுறுத்த கூடும். பங்கு சந்தை முதலீடு அதிக நட்டத்தை ஏற்படுத்த கூடும். ரியல் எஸ்டேட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

Prev Topic

Next Topic