குரு பெயர்ச்சி (2018 - 2019) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

ஆகஸ்ட் 11, 2019 முதல் நவம்பர் 04, 2019 வரை சோதனை காலம் (25 / 100)


கடந்த சமீப குறுகிய காலத்தில் உங்களுக்கு கிடைத்த நிவாரணம் தற்போது சற்று குறையும். நீங்கள் தற்போது கடுமையான சோதனை காலத்தில் உள்ளீர்கள். கண்டக சனியின் உண்மையான தாக்கத்தை இந்த காலகட்டத்தில் காண்பீர்கள். உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்க கூடும். உங்கள் உடல் நலம் பெரிய அளவில் பாதிக்க கூடும். உங்கள் உடல் உபாதைகள் அதிகரிக்க கூடும். நீங்கள் தூக்கம் இல்லாத பல இரவுகளை கழிக்க நேரிடும்.
உங்கள் மனைவி / கணவனுடன் ஏற்படும் கருத்து வேறுபாடு உங்களை அதிகம் வறுத்த பட செய்யும். திருமணம் ஆனவர்களுக்கு மத்தியில் அன்யுனியம் குறைந்து காணப் படும். குழந்தை பேருக்கு திட்டமிடுவதை இந்த காலகட்டத்தில் தள்ளி போடுவது நல்லது. காதலர்கள் தங்களது உறவை நல்ல நட்போடு தக்க வைத்து கொள்ள அதிகம் போராட வேண்டியதிருக்கும். உங்கள் சொந்த விசயங்களை நண்பர்கள் முதற்கொண்டு யாரிடமும் பகிர்வதை தவிர்ப்பது நல்லது.


உங்கள் குழந்தைகள் உங்களுக்கு புதிதாக சில தேவைகளை வைப்பார்கள். திருமணம் ஆகாத மகன் அல்லது மகள் இருந்தால் அவர்களுக்கு தற்போது வரன் தேடுவதை சிறிது காலம் தள்ளி போடுவது நல்லது. உங்கள் தவறு எதுவும் இல்லாமல் நீங்கள் உங்கள் உறவினர்களுக்கு மத்தியில் அவமானப் படும் சூழல் அல்லது ஏமாற்றம் அடையப் படும்படியான நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு சவால் நிறைந்த காலகட்டமாக இருக்கும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் குறிப்பாக செப்டம்பர் 17, 2019 வாக்கில் நீங்கள் வேலையை இழக்கும் சூழலும் ஏற்படலாம். உங்கள் உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவற்றை தற்போது எதிர் பார்க்க முடியாது. நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்திர்க்காக உங்கள் வேலையை தக்க வைத்து கொள்ள முயற்ச்சிக்க வேண்டும்.


தொழிலதிபர்கள் எதிர் பாராத பின்னடைவுகளை சந்திக்க வேண்டிய சூழல் வரலாம். உங்கள் முதலீட்டாளர்கள் உங்களுக்கு நிதி உதவி செய்யாமல் போகலாம். மேலும் உங்கள் புதுமையான திட்டங்களை மற்றும் யோசனைகள் பிறர் திருடக் கூடும். உங்கள் நிதி நிலை அவ்வளவாக சிறப்பாக இல்லை. நீங்கள் உங்கள் நிதி தேவையை சமாளிக்க உங்கள் பண வரவை அதிகரிக்க முயற்ச்சிக்க வேண்டும். பங்கு சந்தை முதலீட்டை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. அவ்வாறு முதலீடு செய்தால் அது பெரிய நட்டத்தை ஏற்படுத்தும்.

Prev Topic

Next Topic