குரு பெயர்ச்சி (2018 - 2019) ஆரோக்கியம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

ஆரோக்கியம்


சனி பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிலும் குரு பகவான் 5ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு போதுமான நேர்மறை சக்திகளை கடந்த ஒரு வருடம் தந்திருப்பார்கள். தற்போது குரு பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு ருன ரோக சத்ரு சாதனத்திற்கு இடம் மாறுகிறார். அதனால் நீங்கள் உங்கள் உடல் நலத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மனைவி / கணவன் மற்றும் பெற்றோர்களின் உடல் நலம் பாதிக்க கூடும். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்க கூடும். எனினும் மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது.
கலீரல், கொழுப்புச்சத்து, பித்தப்பை போன்றவற்றில் பிரச்சனைகள் வரக் கூடும். எந்த ஒரு எச்சரிக்கை அறிகுறி தோன்றினாலும் அதனை உடனடியாக கவனிப்பது நல்லது. உடனடியாக மருத்துவ உதவி பெறுவது சிறியதாக இருக்கும் போதே பிரச்சனையை சரி செய்ய உதவும். உங்களுக்கு உடல் வலி, கழுத்து மற்றும் மூட்டு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு அதிக பிரச்சனைகளை உடம்பில் ஏற்படுத்தலாம். மேலும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் உங்கள் அலுவலக மற்றும் சொந்த காரணங்களால் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் நீங்கள் அதிகம் வருத்தம் அடைவீர்கள். எந்த ஒரு சரியான முடிவும் எடுக்க முடியாமல் போகலாம்.


ராகு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் மார்ச் 2019 முதல் பிரச்சனைகளை அதிகரிக்க கூடும். உங்களுக்கு ஏப்ரல் 2019 முதல் ஜூலை 2019 வரை சற்று நிவாரணம் கிடைக்கும். தினமும் அதித்ய ஹ்ருதயம் மற்றும் ஹனுமன் சலிச கேட்பது உங்கள் உடல் நல பிரச்சனைகளின் வீரியத்தை குறைக்க உதவும். மேலும் சனிக்கிழமைகளில் சிவனை வணங்குவது நல்லது. செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது.


Prev Topic

Next Topic