![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | காதல் |
காதல்
கடந்த ஒரு வருடம் காதல் விசயங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும். உங்களுக்கு புதிதாக நட்பு ஏற்பட்டிருந்தால் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. எனினும் தற்போது குரு பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு பெயருவதால் நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். புதிதாக உங்களுக்கு கிடைக்கும் நண்பர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் கவனமாக இல்லை என்றால் தேவையற்ற பிரச்சனைகளில் நீங்கள் சிக்க நேரிடலாம்.
உங்கள் உறவுகளுக்கு நடுவில் யார் வந்தாலும் அவர்கள் நிலைமையை மோசமாக்க கூடும். அதனால் உங்கள் சொந்த விசயங்களை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது.
நீங்கள் யாரையேனும் விரும்புகுரீர்கள் என்றால் உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்களை சம்மதிக்க வைப்பது மிக கடினமாக இருக்கலாம். மேலும் இதனால் இரு குடும்பங்களுக்கிடையே சண்டை வரவும் வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த சூழலை சமாளிக்க நீங்கள் அதிக பொறுமையோடு இருக்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கை துணைவருடன் அதிக வாக்குவாதத்தில் நீங்கள் ஈடுபடுவதால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படுவது சற்று சந்தேகமே. மேலும் உடல் நல பிரச்சனைகளும் உங்கள் உறவை பாதிக்க கூடும். இந்த காலகட்டத்தில் குழந்தைபேறுக்கு திட்டமிடுவது நல்லதல்ல. மேலும் மருத்துவ முயற்ச்சிகளும் நீங்கள் எதிர் பார்த்த பலனை தற்போது தராது. தற்போது கருவுற்றிருக்கும் பெண்கள் தங்கள் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
Prev Topic
Next Topic