குரு பெயர்ச்சி (2018 - 2019) திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

People in the field of Movie, Arts, Politics, etc


கடந்த ஒரு வருடம் உங்களுக்கு குரு ஜென்ம ராசியில் சஞ்சரித்ததால் சிறப்பாக இருந்திருக்கும். நீங்கள் பல நல்ல பலன்களை பெற்றிருப்பீர்கள். மேலும் பல நல்ல வாய்ப்புகளும் வந்திருக்கும். ஆனால் தற்போது உங்களுக்கு அவாறான வாய்ப்புகள் கிடைப்பது சந்தேகமே. உங்கள் ப்ராஜெக்ட் எதிர் பார்த்தபடி இருக்காது. இதனால் பல பிரச்சனைகள் வரக் கூடும். மேலும் நிதி பிரச்சனைகளும் வரக் கூடும். உங்களுக்கு எதிராக நடக்கும் மறைமுக சதி மற்றும் அரசியல் மேலும் உங்கள் நிலையை பாதிக்க கூடும். உங்களுக்கு கிடக்க உள்ள வாய்ப்புகளை நீங்கள் இழக்க கூடும். மேலும் தற்போது இருக்கும் ஒப்பந்தமும் ரத்தாக வாய்ப்பு உள்ளது.
உங்களுக்கு எதிராக யார் விளையாடுகிறார்கள் என்பதை கண்டறிவது உங்களுக்கு கடினமாக இருக்கும். நீங்கள் ஒரு புகழ் பெற்ற திரை நட்ச்சதிரமாக இருந்தால் உங்கள் பேரும் புகழும் பாதிக்காமல் இருக்க பார்த்து கொள்வது நல்லது. தற்போது முடிந்த வரை புது ப்ராஜெக்ட் எதுவும் எடுக்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு அவசர முடிவும் உங்கள் புகழை பாதிப்பதோடு அதிக பண நட்டத்தையும் ஏற்படுத்த கூடும். மேலும் உங்களுக்கு அரசியல் மற்றும் அரசு விசயங்களால் பல பிரச்சனைகள் வரக் கூடும். அரசியலில் இருப்பவர்கள் மறைமுக எதிர்களால் பாதிக்கப் படலாம்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic