குரு பெயர்ச்சி (2018 - 2019) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

கண்ணோட்டம்


கடந்த ஒரு வருடமாக குரு பகவான் உங்கள் பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரித்தது உங்களுக்கு சிறப்பான பலன்களை தந்திருக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கண்டிருப்பீர்கள். சனி பகவான் உங்கள் ராசியின் களத்திர ஸ்தானத்தில் சஞ்சரித்ததால் பிரச்சனைகள் குறைந்திருக்கும்.
தற்போது குரு பகவான் உங்கள் ருன ரோக ஸ்தானத்திற்கு அக்டோபர் 11, 2018 அன்று இடம் மாறுகிறார். ராகு மார்ச் 2019ல் உங்கள் ஜென்ம ராசிக்கு இடம் மாறுகிறார். சனி மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பார்கள். இந்த முக்கிய கிரகங்கள் அடுத்த 12 மாதங்களுக்கு சாதகமற்ற நிலையில் சஞ்சரிக்கின்றனர்.



இதனால் உங்கள் உடல் நலம் பெரிதும் பாதிக்க படும். உங்கள் குடும்பத்திலும் அலுவகத்திலும் அதிகம் அரசியல் ஏற்படும். அது உங்கள் மன அமைதியை பெரிதும் பாதிக்க கூடும். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்காது. பயணம் மற்றும் குடியேற்றம் குறித்த விசயங்கள் பிரச்சனைகளை உருவாக்க கூடும்.


மொத்தத்தில் நீங்கள் அடுத்த 12 மாதங்களுக்கு சோதனை காலத்தில் இருப்பீர்கள். போதுமான மருத்துவ காப்பீடு, வாகனம் மற்றும் சொத்து காப்பீடு உள்ளத என்பதை பார்த்து கொள்வது நல்லது. கடவுள் வழிபாடு செய்வது மற்றும் விஷ்ணு சஹசர நாமம் கேட்பது குரு பெயர்ச்சியால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்க உதவும்.

Prev Topic

Next Topic