![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 27, 2019 முதல் ஏப்ரல் 25, 2019 வரை நல்ல நேரம் (75 / 100)
இந்த குறுகிய காலகட்டத்திற்கு குரு பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு இடம் மாறுகிறார். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த கூடும். நீங்கள் உங்கள் பிரச்சனைகளை எளிதில் சமாளிப்பீர்கள். குரு பகவான் உங்கள் நிதி மற்றும் சொந்த பிரச்சனைகளை சமாளிக்க நல்ல பலத்தை தருவார்.
நீங்கள் உங்கள் உடல் நல பிரச்சனையின் மூல காரணத்தை கண்டறிந்து தக்க மருத்துவம் பெற்று முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் உடல் நல பிரச்சனைகள் குறையும். உங்கள் குடும்ப சூழலில் இருந்த பிரச்சனைகள் குறையும். புதிதாக திருமணம் ஆனவர்கள் கலந்து பேசி நல்ல புரிதலுக்கு வந்து சமூகமான வாழ்க்கையை வாழ்வார்கள். காதலர்களுக்கு சிறப்பான நேரம் இருக்கும். எனினும் பெண்கள் குழந்தை பேருக்கு திட்டமிடுவதை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது.
நீங்கள் தற்போது படிப்பை முடித்தவராக இருந்தால் உங்களுக்கு புது வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நல்ல சம்பளத்துடன் உங்களுக்கு வலை வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை ஏற்று கொள்வதை தவிர வேறு வழி இல்லை. உங்கள் வேலை சுமை குறையும். தொழிலதிபர்கள் சுறுசுறுப்பாக பனி புரிவார்கள். இதனால் உங்கள் நிதி பிரச்சனைகளும் தடைகளும் குறையும்.
பயணம் செய்ய நேரம் சிறப்பாக உள்ளது. உங்களுக்கு விசா குறித்து சில பிரச்சனைகளை ஏற்பட்டிருந்தால் அது இந்த காலகட்டத்தில் சரியாகி விடும். உங்கள் கடனை அடைக்க நிதி மறுபரிசீலனை மற்றும் வேறு சிறப்பான திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கும். குரு பகவான் நல்ல நிலையில் இந்த குறுகிய காலகட்டத்திற்கு சஞ்சரித்தாலும் பங்கு சந்தை வர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இந்த நற்பலன்கள் சிறிது காலத்திற்கு மட்டுமே..
Prev Topic
Next Topic