குரு பெயர்ச்சி (2018 - 2019) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

ஏப்ரல் 25, 2019 முதல் ஆகஸ்ட் 11, 2019 வரை தேக்கம் (50 / 100)


இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். கண்டக சனியின் தாக்கம் குறைந்து கணப் படும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த காலகட்டத்தில் பெரிதாக எந்த பிரச்சனையும் இருக்காது. எனினும் அதே நேரத்தில் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காண முடியாது. விசயங்கள் ஒரே இடத்தில் தேங்கி நிற்கும்.
நீங்கள் செய்யும் எந்த விடயத்திலும் தாமதம் ஏற்படும். உங்களுக்கு ஒரு தெளிவான பாதை கிடைக்காது. இதனால் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க முடியாமல் போகலாம். மறைமுக எதிரிகளால் உங்களுக்கு பிரச்சனைகள் வரக் கூடும். எனினும் நீங்கள் அத்தகைய பிரச்சனையை அறிய மாட்டீர்கள். உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும். எனினும் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த சூழல் ஏற்பட உங்கள் பிறந்த ஜாதகத்தின் பலனும் தேவை. சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் புதிதாக எந்த நட்பும் யாரிடமும் வைத்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.



அலுவலகத்தில் உங்கள் வேலை சுமை தொடர்ந்து அதிகரிக்கும். உங்கள் முதலாளி உங்கள் மீதும் உங்கள் உற்பத்தி மீதும் அதிகம் கண்காணிப்போடு இருப்பார். இது உங்களை அசௌகரியப் படுத்த கூடும். உங்கள் கடன் சுமைகளை ஓரளவிர்க்காயினும் சமாளிப்பீர்கள். எனினும் அசல் குறையாது. தொழிலதிபர்கள் வளர்ச்சி காண உங்கள் பிறந்த ஜாதக பலன் நன்றாக இருக்க வேண்டும். புதிதாக எந்த ஒரு முதலீடும் செய்ய இது ஏற்ற காலகட்டம் இல்லை. ராகு உங்களுக்கு நிதி இழப்பை அதிகம் ஏற்படுத்த கூடும் என்பதால் ஊக வர்த்தகம் செய்வதை தவிர்ப்பது நல்லது.




Prev Topic

Next Topic