![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
¬குரு உங்கள் ருன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வர்த்தகம் செய்பவர்கள் மற்றும் முதலீட்டார்களுக்கு இது ஒரு எச்சரிக்கை அறிகுறி. உங்கள் பங்கு சந்தை கணிப்புகள் தவறாகக் கூடும். இந்த காலகட்டத்தில் முற்றிலும் பங்கு சந்தை முதலீட்டை தவிர்ப்பது நல்லது.
நீங்கள் நீண்ட கால முதலீடு செய்பவராக இருந்தால் ரிஸ்க்கை தவிர்க்க உங்கள் லாபத்தை மற்றும் பங்குகளை பணமாக்கி கொண்டு வெளியே வருவது நல்லது. மேலும் சேமிப்பு, நிரந்தர வைப்பு, அரசு பத்திரம் போன்றவற்றில் உங்கள் பணத்தை பாதுகாக்கலாம். புது வீடு வாங்குவது அல்லது ரியல் எஸ்டேட் முதலீடு செய்வது தற்போது அடுத்த ஒரு வருடத்திற்கு நல்ல யோசனை அல்ல. நீங்கள் உங்கள் வீடு அல்லது வேறு இடங்களை வாடகைக்கு விட்டிருந்தால் அதனால் குடி இருப்போர் அல்லது பாதசாரிகளால் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. முடிந்த வரை ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic